பிளஸ் 2 முடித்துவிட்டு என்ன படிக்கலாம் என்று காத்திருக்கும் மாணவர்களுக்கு அரசு வேலைகளைப் பெற்றுத் தருகின்ற ஆர்க்கியாலஜி துறையில் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. பழங்கால மனிதர்களின் நாகரிகம், வாழ்க்கை முறை, நினைவுச்சின்னங்கள், கல்வெட்டுகள், கட்டடக்கலை, அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், தத்துவஞானம், நில அமைப்பு போன்றவற்றை ஆராய்ந்து படிக்கும் துறையே தொல்லியல் எனப்படும். ஆர்க்கியாலஜி எனும் சொல் கிரேக்க மொழி வகையைச் சேர்ந்தது. ஆர்க்கியாஸ் என்றால் பழங்காலப் பொருட்கள் என்றும், லோகோஸ் என்றால் அறிவியல் தத்துவம் என்றும் பொருளாகும்.
பண்பாடுகளின் கலவை:
தொல்லியல் படிப்பானது புவியியல், வரலாறு, மானுடவியல், வேதியியல், நிலவியல், கலை மற்றும் இலக்கியம் உள்ளிட்டவையின் கலவையாகும்.
சுற்றுப்புற பாதுகாப்பு:
சுற்றுப்புற பாதுகாப்பு, நகர அமைப்பு, நகர்ப்புற சமூகம், உள்ளிட்ட விஷயங்களை முறைப்படியாக மேற்கொள்வதற்கு இந்த படிப்புகள் அவசியமாகிறது. கலை சார்ந்த பாரம்பரியங்கள்: இந்திய தொல்லியல் ஆய்வகம் இந்தியாவின் கலை சார்ந்த பாரம்பரியங்களை பாதுகாப்பதற்காக, இந்திய தொல்லியல் ஆய்வகம் என்னும் அமைப்பை 1862 ஆம் ஆண்டு ஏற்படுத்தியது.
அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்:
பிரிட்டனைச் சேர்ந்த ஜெனரல் அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் இந்த அமைப்பின் முதல் இயக்குநராக இருந்தார். தொல்லியல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய இவரே, “தொல்லியல் ஆய்வுகளின் தந்தை” எனவும் அழைக்கப்படுகிறார்.
தொன்மையை விளக்கும் கட்டிடங்கள்:
தொல்பொருள் ஆராய்ச்சிக்கு ஏற்ப இந்தியா, சுமார் 24 வட்டங்களாக பிரிக்கப்பட்டு செயல்படுகிறது. இந்தியாவின் தொன்மையை விளக்கும் பழங்கால கட்டடங்கள், நினைவுச் சின்னங்கள், மற்றும் கல்வெட்டுகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பதும், பராமரிப்பதும் தொல்லியல் துறையின் முதன்மை பணியாகும்.
இக்கல்விக்கான தகுதிகள்:
1. இளங்கலை பழங்கால வரலாறு மற்றும் தொல்லியல் படிப்புக்கு பிளஸ் 2 படிப்பு போதுமானது. 2. டிப்ளமோ/முதுநிலை டிப்ளமோ/முதுநிலை உள்ளிட்ட தொல்லியல் படிப்புகளுக்கு, இளநிலை படிப்பில் 55 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
தொல்லியல் ஆய்வாளர்கள்:
தொல்லியல் சார்ந்த கண்டுபிடிப்புகளில் ஈடுபடுபவர்கள் தொல்லியல் ஆய்வாளர்கள் (ஆர்க்கியாலஜிஸ்ட்) என அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு முதன்மையானது களப்பணி. சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று இவர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.
ஆர்க்கியாலஜி படிப்பு வழங்கப்படும் பல்கலைக்கழகங்கள்:
1. இந்திய தொல்லியல் ஆய்வகம் - டெல்லி.
2. அலகாபாத் பல்கலைக்கழகம் - அலகாபாத்.
3. ஆந்திரா பல்கலைக்கழகம் - விசாகப்பட்டினம்.
4. பெங்களூரு பல்கலைக்கழகம் - பெங்களூரு.
5. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் வாரணாசி.
6. சென்னை பல்கலைக்கழகம் -சென்னை.
7. கொல்கத்தா பல்கலைக்கழகம் -கொல்கத்தா.
8. மைசூர் பல்கலைக்கழகம் -நாகர்ஜூனா நகர்.
9. மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம் - பரோடா.
10. குஜராத் பல்கலைக்கழகம் - அகமதாபாத்.
வேலைவாய்ப்புகள்:
தொல்லியல் படிப்பை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு வெளிநாடு, மற்றும் உள்நாட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. கல்லூரியில் ஆசிரியராகவும், மற்றும் ஆய்வுக் கூடங்களிலும் பணி புரியலாம். அரசு ஏஜென்சிகளிலும் வேலைவாய்ப்பு உள்ளது.
உயர்ந்த பதவி, நல்ல சம்பளம் என்றில்லாமல் தனி விருப்பம், பழமை மீதான ஆர்வம், மன திருப்தி, ஆசையை நிறைவேற்றக் கூடிய படிப்பாக பி.ஏ. ஆர்க்கியாலஜி உள்ளது. பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தனித் திறனை வெளிக்காட்டவும் சுய விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளவும் விரும்புபவர்கள் ஆர்க்கியாலஜி பட்டப்படிப்பைத் தேர்வு செய்யலாம். எகிப்து நாட்டில் ஆர்க்கியாலஜிஸ்ட்டுக்கு தனி மரியாதையும் செல்வாக்கும் உள்ளது.
Archaeology Courses In India, Colleges And Institutes Having Archaeology Course
ARCHAEOLOGY Courses In India
List of Institutions In India
1. Allahabad University, Allahabad - 211 002
2. Andhra University, Vishakhapatnam - 530 003
3. AP Singh University, Rewa-486 003
4. Bangalore University, Bangalore - 560 056
5.BHU, Varanasi - 221 005
6. Chhatrapati Shahu Ji Maharaj University, Kanpur - 208 024
7. Deccan College of Post-Graduate and Research Institute, Yervada, Pune - 411 006
8. Deen Dayal Upadhyaya Gorakhpur University, Gorakhpur - 9
9. Dr Harisingh Gour Vishwavidyalaya, Sagar-470 003, MP
10. Dr B.S.Ambedkar Marathwada University, Aurangabad
11. Gujarat University, Ahmedabad - 380 009
12. HN Bahuguna Garhwal University, Srinagar - 246 174
13. Kurushetra University, Kurukshetra - 136 119
14.Mangalore University, Mangalagangothri - 574 199
15. MS University of Baroda, Vadodara - 390 002
16.Nagpur University, Nagpur - 440 001
17. North Maharashtra University, Jalgaon - 425 002
18. Osmania University, Hyderabad - 500 007
19. Patna University, Patna - 800 005
20. Punjab University, Chandigarh - 160 014
21. Purvanchal University, Jaunpur - 222 002
22.Rani Durgavati Vishva vidyalaya, Jabalpur - 482 001,
23. University of Calcutta, Calcutta - 700 073
24. University of Madras, Chennai - 600 005
25.University of Mysore, Nagarjuna Nagar - 522 510
26. University of Pune, Pune-411 007
27.Visva Bharati, Santiniketan-731 235
Post Graduate Diploma in Archaeology (PGDA) of 2 years duration is offered by Archaeological Survey of India, Institute of Archaeology, 24-Tilak Marg, New Delhi - 110 001. Those who have completed M.A. in Ancient/Medieval Indian History or M.A./M.Sc in Archaeology with 55% marks are eligible for the course. (50% for SC/ST/OBC) The upper age limit is 27 years. Selection is based on a Written Test and Interview. Applications are invited in June and the session commences in October.
Two special programmes in Archaeology are offered by: the Delhi Institute of Heritage Research and Management, 18-A, Satsang Vihar, Qutab Institutional Area, New Delhi - 67
a) Master in Conservation, Preservation and Heritage Management
b) Master in Archaeology and Heritage Management
The programmes are of 2 years duration and the course begins in July. Graduates in History, Archaeology, Chemistry, Physics, Zoology, Botany, Geology, Museology, Anthropology/B.E, B.Arch, B.Town Planning can apply. Admission is through an entrance test.