இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன் தெரிவித்ததாவது,
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும், மேற்கண்ட இன மக்களில் 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து, ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு தலா ரூ.3.00 இலட்சம் வீதம் தமிழகம் முழுவதும் 25 அலகுகள் ஏற்படுத்த அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
தையல் தொழிலில் ஈடுபட்டு வரும் பிவ, மிபிவ (ம) சீம வகுப்பை சார்ந்த ஆண், பெண் 10 நபர்களை கொண்டு ஒரு குழு அமைத்து அக்குழுவிற்கு ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க உபகரணங்கள் வாங்க அதற்கான நிதி தோராயமாக பின்வருமாறு வழங்கப்படும்.
- Single Needle Machine தலா ரூ.20,000/- வீதம் 5 எண்ணிக்கை,
- Overlock Machine 1 - ரூ.30,000/-,
- Cutting Machine 1 - ரூ.15,000/-,
- Cutting Table 1 - ரூ.15,000/-,
- Industrial Ironing Table 1 - ரூ.30,000/-,
- Accessories - ரூ.10,000/-,
- இடைநிகழ் செலவினம் ரூ.50,000/- மற்றும்
- பணி மூலதனம் ரூ.50,000/-
ஆக மொத்தம் ஒரு குழுவிற்கான தோராய செலவினம் ரூ.3,00,000/- வழங்கப்படும்.
பயனாளிகளை தேர்வு செய்வதற்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்
a) குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும்.
b) குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (Ministry of Micro, Small and Medium Enterprises) துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
c) விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
d) 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும்.
e) 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் அவசியம் ஆகும்.
f) குழு உறுப்பினர்கள் பிவ, மிபிவ (ம) சீம இனத்தைச் சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
g) குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த மக்கள் தகுதியான குழுக்களை அமைத்து குழுவின் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.