அஞ்சல் துறையில் காலியாக உள்ள 30, 041 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான (GRAMIN DAK SEVAKS -GDS) ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 2,994 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதில்,
- பொதுப் பிரிவினருக்கு 1406 இடங்களும் ,
- ஓபிசி பிரிவினருக்கு 689 இடங்களும்,
- பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கு 280 இடங்கள்
- பட்டியல் இனத்தைச் சேர்ந்தவருக்கும் 492 இடங்கள் ,
- பட்டியல் பழங்குடியியினருக்கும் 20 இடங்கள்
ஒதுக்கப்பட்டுள்ளன
இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 10ம் வகுப்புத் தேர்வில், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளை கட்டாயப் பாடங்களாகவோ அல்லது விருப்பப் பாடங்களாகவோ எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பெண்களுக்கு கூடுதல் வாய்ப்பு:
இந்த காலிப்பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் (Merit List) தயாரிக்கப்படும்.
10ம் வகுப்பு தேர்ச்சிப் பட்டியலில், மதிப்பெண்களுக்கு பதிலாக Grade தகுதி அளவீடுகளைக் கொண்டிருந்தால், அவை 9.5 என்ற விழுக்காட்டு அளவால் பெருக்கப்பட்டு, மதிப்பெண்களாக மாற்றம் செய்யப்படும்.
10ம் வகுப்புத் தேர்வில், இரண்டிற்கும் மேற்பட்ட தேர்வர்கள் சமமான மதிப்பெண்களைப் பெற்றிருந்தால்,
" வயதில் முதியவர், பழங்குடியின இனத்தைச் சேர்ந்த திருநங்கை, பட்டியல் இனத்தைச் சேர்நத திருநங்கை, பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண்கள், ஓபிசி பிரிவைச் சேர்ந்த திருநங்கை, ஓபிசி பிரிவினரில் உள்ள பெண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த திருநங்கை, பொருளாதார பின்தங்கிய வகுப்பினரில் உள்ள பெண்கள், பொதுப் பிரிவினரில் உள்ள திருநங்கை, பொதுப் பிரிவினரில் உள்ள பெண்கள், பழங்குடி வகுப்பைச் சேர்ந்த திருநம்பி, பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ஆண்கள், பட்டியல் வகுப்பைச் சேர்ந்த திருநம்பி, பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ஆண்கள், ஓபிசி பிரிவைச் சேர்ந்த திருநம்பி, பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் உள்ள ஆண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த திருநம்பி, பொருளாதார பின்தங்கிய வகுப்பினரில் உள்ள ஆண்கள், பொதுப் பிரிவினரில் உள்ள திருநம்பி, பொதுப் பிரிவினரில் உள்ள ஆண்கள்" என்ற முறையின் மூலம் மூப்பு நிலை கண்டறியப்படும்.
விண்ணப்பக் கட்டணம் கிடையாது: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 ஆகும். இருப்பினும், பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள், மாற்றுத் திறனாளிகள்/ திருநர்கள் ஆகிய பிரிவைச் சார்ந்த விண்ணப்பதார்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
கடந்த சில ஆண்டுகளாகவே, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், மாணவர்களை விட மாணவிகளே தேர்ச்சி விகிதத்திலும், மதிப்பெண் அளவிலும் சிறந்து விளங்கி வருகின்றனர். தற்போது, சமமான மதிப்பெண் பெற்றிருந்தால், அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த பெண் விண்ணப்பதாரங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுளளது. எனவே, பெண்கள் இத்தேர்வில் வெற்றி பெற சாதகமான சூழல் உருவாகியுள்ளது.
'Gramin Dak Sevak (GDS) Online Engagement: Schedule-II, July, 2023
click here 👉 https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Model_Notification.pdf