தழிழ்நாடு அரசின், சமூக நலத்துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில், அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE) - என்ற திட்டத்திற்கு வழக்கு பணியாளர் 1 & 2 (Case Worker 1 &2) (24X7), பாதுகாவலர் (Security) (24X7), மற்றும் பல்நோக்கு உதவியாளர் (Multipurposer) (24X7) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் நேரடியாக வரவேற்கப்படுகின்றன.
1 விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசிநாள் : 17.08. 2023.
2. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய இடம்:
மாவட்ட சமூகநல அலுவலகம்,
4வது மாடி, 'B' பிளாக்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
சத்துவாச்சாரி, வேலூர்.
3. வழக்கு பணிபாளர் 1& 2 (Case Worker1 &2) (24X7), காலிபணியிடம்: 02
தகுதிகள்;
- கல்விதகுதி: இளங்கலை (அ) முதுகலை பட்ட படிப்பு - (Social Work, Sociology, Psychology, Counselling Psychology or Development Management).
- உடல் ஊனம் அற்றவராக இருத்தல் வேண்டும்.
- 1 வருடத்திற்கு மேலாக முன்அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருத்தல் அவசியம்.
- உள்ளூர் விண்ணப்பதாரராகவும் இருத்தல் அவசியம்.
4. பல்நோக்கு உதவிபாளர் (Multipurposer)(24X7), காலிபணியிடம்: 01
தகுதிகள்:
- கல்விதகுதி : 8வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி/தோல்வி.
- உடல் ஊனம் அற்றவராக இருத்தல் வேண்டும்.
- நன்கு சமைக்க தெரிந்த பெண் பணியாளராசு இருத்தல் அவசியம்.
- 24 மணிநேரம் பணிசுழற்சி முறையில் பணிபுரிந்திட உள்ளவராகவும் இருத்தல் அவசியம்.
- உள்ளூர் விண்ணப்பதாரராகவும் மையத்திலேயே தங்க விருப்பம் உள்ளவராகவும் இருத்தல் அவசியம்.
5. பாதுகாவலர் (Security) (24X7), காலிபணியிடம்: 02
தகுதிகள்:
- கல்விதகுதி:8வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி/தோல்வி
- உடல் ஊனம் அற்றவராக இருத்தல் வேண்டும்.
- ஓட்டுநர் உரிமம் மற்றும் உரிய ஆவணங்கள் பெற்றிருக்க வேண்டும், 2 வருடத்திற்கு மேலாக முன் அனுபவம் பெற்று இருத்தல் அவசியம்.
- (24X7) பணி சுழற்சி முறையில் பணிபுரிந்திட விருப்பம் உள்ளவராகஇருத்தல் அவசியம்.
- உள்ளூர் விண்ணப்பதாரராகவும் இருத்தல் அவசியம்.
- உள்ளூர் காவல் நிலையத்தில் தடையில்லாச் சான்று(NOC) பெற்றுவரவும்.
விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பபடிவத்தினை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் இணையதள முகவரியில் www.vellore.nic.in பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாக அல்லது தபால் மூலமாக 17.08.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் கீழ்க்கண்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அலுவலகமுகவரி:
மாவட்ட சமூக நல அலுவலகம்.
"பி" பிளாக், 4 வதுதளம்,
மாவட்டஆட்சியரகம்,
வேலூர்- 09.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்
Notification : Click and download 👇
One-Stop Centre Recruitment for Various Posts in DSWO Department Vellore
இணையதள முகவரி : www.vellore.nic.in