இதுகுறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளதாவது,
சவுதி அரேபிய அரசின் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்த பட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் B.Sc Nursing தேர்ச்சி பெற்ற 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். மேலும், Data Flow மற்றும் HRD சான்றிதழ்களில் சான்றொப்பம் பெற்றவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். மேற்படி, பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைத்தளமான www.omcmanpower.com-ல் கண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் (9566239685, 6379179200, 044-22505886 / 044-22502267)
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு அருகிலேயே பதிவு செய்வதற்கு ஏதுவாக காஞ்சிபுரத்தில் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, 04.08.2023 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமிற்கு வர முடியாதவர்கள் தங்களுடைய சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பப்படிவத்தை ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜென்ட்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரிடியாக முகாமிற்கு வந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பதிவு மற்றும் பணி விவரங்கள் தகுதியைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும். இந்த பணிக்கு தேர்வு பெறும் பணியாளர்களிடமிருந்து சேவைக் கட்டணமாக ரூ.35,400/- மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் B.Sc Nursing தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்கள் பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
அதிகாரப்பூர்வ இணையதளம்
click here : https://www.omcmanpower.com/