இந்திய விமானப் படையின் அக்னிவீர் வாயு விமானப்படை திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு தேர்விற்கான பதிவு இணையவழியில் 17.08.2023 விண்ணப்பிக்கலாம்.
அக்னிவீர்வாயு தேர்வுக்கு 27.06.2003 முதல் 27.12.2006 வரை பிறந்த திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்.
இத்தேர்வுக்கு 12 ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி) மூன்றாண்டு டிப்ளமோ படிப்புகளில் மொத்தம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆர்வமுள்ள இளைஞர்கள் https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
மேலும், தகவல்களுக்கு வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகி அறிந்து கொள்ளலாம் அல்லது தொலைபேசி எண் 0416 2290042 வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.
வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அக்னிவீர் வாயு விமானப்படை தேர்வில் பங்கு பெற்று பயனடையுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
.........................
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்
👇Click and view the below Notification & Form 👇
APPLICATION FORM
Demo Videos for Physical Fitness Test (PFT) - II (NON-COMBATANT)
Notification 👇AGNIVEERVAYU INTAKE 01/2024