சென்னை தரமணியிலுள்ள Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition நிறுவனமானது ISO 9001 2015 தரச் சான்று பெற்ற நிறுவனமாகும். இந்நிறுவனமானது ஒன்றிய அரசின் சுற்றுலா துறையின் கீழ். அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம், மேலும் இந்நிறுவனம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது. Amercian Council of Business ஆல் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. France நாட்டில் உள்ள Lycee Nicolas Appert Catering நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
Hotel Management Institute Survey 2022- ன்படி உலகளாவிய மனித வள மேம்பாட்டு மையத்தில் 2வது இடம் பெற்றுள்ளது. CEO WORLD MAGAZINE நடத்திய உலகளவில் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளில் உலக தர வரிசையில் 13வது இடத்தில் இந்நிறுவனம் இடம் பெற்றுள்ளது.
இப்புகழ் பெற்ற நிறுவனத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவருக்கு
- B.Sc (Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நேர பட்டபடிப்பு.
- ஒன்றறை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு (Diploma Food Production) பட்டயப் படிப்பு
- மேலும் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றறை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினஞர் ( Craftmanship Course in Food Production & Patisserie)
- உணவு மற்றும் பானசேவையில் கைவினைத்திறன் படிப்பு (Craftmanship Course in Food & Beverage Service)
- பேக்கரி மற்றும் மிட்டாய் துறையில் பட்டயப்படிப்பு (Diploma in Bakery & Confectionary)
- முன் அலுவலக செயல்பாட்டில் பட்டயப்படிப்பு (Diploma in Front Operation)
- ஹவுஸ் கீப்பிங் செயல்பாட்டில் பட்டயப்படிப்பு (Diploma in Housekeeping Operation)
- உணவு முறை மற்றும் உணவு சேவை முதுகலை பட்டதாரி பட்டயப்படிப்பு (Post Graduate Diploma in Dietetics & Hospital Food Service Post Graduate)
- விடுதி செயல்பாடு மற்றும் நிர்வாகத்தில் முதுகலை பட்டயப்படிப்பு (Post Graduate Diploma in Accommodation Operation & Management)
படிப்பில் சேர்ந்து படித்திடவும், படிப்பு முடிந்தவுடன். நட்சத்திர விடுதிகள், விமானம் நிறுவனம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர் தர உணவகங்கள் போன்ற இடங்களில் வேலை வாய்ப்பும் பெற்று தரப்படும்.
இப்பயிற்சி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தாவராக இருக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
இப்படிப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும். ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25.000/- முதல் ரூ.35,000/- வரை பெறலாம்.
இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணைதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என தாட்கோ மேலாண்மை இயக்குநர் திரு.க.சு.கந்தசாமி இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் தொடர்புக்கு மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்
தாட்கோ தலைமை அலுவலக முகவரி :
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ)
தாட்கோ, #31, செனோடாப் சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600018. தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி : (044) 24310197
தொலைநகல் : (044) 24310196
மின்னஞ்சல் : tahdcoheadoffice@gmail.com
வேலூர் மாவட்டம் : மாவட்ட மேலாளர், தாட்கோ, நெ.153/1, கோவிந்தராஜ் நகர், ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி வளாகம், ஓட்டேரி, வேலூர் மாவட்டம்- 632 002. வேலூர் மாவட்டம் தொலைபேசி எண்: 9445029483
ஈரோடு மாவட்டம் : மாவட்ட மேலாளர், தாட்கோ, 6 வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு. தொலைபேசி எண் : 0424- 2259453.
Click here 👉மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகத்தை முகவரி மற்றும் தொ.எண்
அதிகாரப்பூர்வ இணையதளம்
Institute Of Hotel Management, Chennai - Courses
Some content on my website.