இயல் -2 / பக்கம் 34
1 .பொறித்த - பொறி + த் + த் +அ
பொறி - பகுதி
த் - சந்தி
த் - இறந்தகால இடைநிலை
அ - பெயரெச்ச விகுதி
இயல் - 3 / பக்கம் 55
2. உரைத்த - உரை + த் + த் + அ
உரை - பகுதி
த் - சந்தி
த் - இறந்தகால இடைநிலை
அ - பெயரெச்ச விகுதி
3 . வருக - வா (வரு) +க
வா - பகுதி , வரு எனக் குறுகியது விகாரம்
க - வியங்கோள் வினைமுற்று விகுதி
பக்கம் 57
4 . மலைந்து - மலை + த்(ந்) + த் + உ
மலை - பகுதி
த் - சந்தி ' ந் ' ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
உ - வினையெச்ச விகுதி
5 . பொழிந்த - பொழி + த் (ந்) + த் + அ
பொழி - பகுதி
த் - சந்தி ' ந் ' ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
அ - பெயரெச்ச விகுதி
இயல் - 4 / பக்கம் 84
6 . கிளர்ந்த - கிளர் + த்(ந்) + த் +அ
கிளர் - பகுதி
த் - சந்தி ' ந் ' ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
அ - பெயரெச்ச விகுதி
இயல் -5 / பக்கம் 110
7. தணிந்தது - தணி + த் (ந்) + த் +அ + து
தணி - பகுதி
த் - சந்தி ' ந் ' ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
அ - சாரியை
து - படர்க்கை வினைமுற்று விகுதி
இயல் -6 / பக்கம் 134
8 . பதிந்து - பதி + த் (ந்) + த் + உ
பதி - பகுதி
த் - சந்தி, ' ந் ' ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
உ - வினையெச்ச விகுதி
இயல் -7 / பக்கம் 169
9. மயங்கிய - மயங்கு+இ(ன்) + ய் +அ
மயங்கு - பகுதி
இ(ன்) - இறந்தகால இடைநிலை : 'ன்' புணர்ந்து கெட்டது
ய் - உடம்படுமெய்
அ - பெயரெச்ச விகுதி
இயல் - 9 / பக்கம் 215
10 . அறியேன் - அறி +ய் +ஆ +ஏன்
அறி - பகுதி
ய் - சந்தி
ஆ - எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டது
ஏன் - தன்மை ஒருமை வினைமுற்று
11. ஒலித்து - ஒலி + த் + த் + உ
ஒலி - பகுதி
த் - சந்தி
த் - இறந்தகால இடைநிலை
உ - வினையெச்ச விகுதி
.