வேலூர் :
தமிழ்நாடு அரசின், சமூக நலத்துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில், அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE) - என்ற திட்டத்திற்கு வழக்கு பணியாளர் (Case Worker 1&2) (24X7), பாதுகாவலர் (Security) (24X7) மற்றும் பல்நோக்கு உதவியாளர் (Multipurposer) (24X7) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் நேரடியாக வரவேற்கப்படுகின்றன.
1. வழக்கு பணியாளர் பணி (Case Worker):
சம்பளம் : ரூ.18000/-,
காலிபணியிடம் : 02
தகுதிகள்:
- பட்டபடிப்பு Master’s of Social Work, Counselling Psycology or Development Management
- உடல் ஊனம் அற்றவராக இருத்தல் வேண்டும்.
- 2 வருடத்திற்கு மேலாக முன்அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருத்தல் அவசியம்.
- உள்ளூர் விண்ணப்பதாரராகவும் இருத்தல் அவசியம்.
2. பல்நோக்கு உதவியாளர் பணி (Multipurposer) :
சம்பளம் : ரூ.10,000,
காலிபணியிடம் : 02
தகுதிகள்:
- 8வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி/தோல்வி.
- உடல் ஊனம் அற்றவராக ஸீருத்தல் வேண்டும்.
- நன்கு சமைக்க தெரிந்த பெண் பணியாளராக இருத்தல் அவசியம்.
- உள்ளூர் விண்ணப்பதாரராகவும் மையத்திலேயே தங்க விருப்பம் உள்ளவராகவும் இருத்தல் அவசியம்.
3. பாதுகாவலர் பணி (Security) :
சம்பளம் : ரூ.12,000,
காலிபணியிடம் : 02
தகுதிகள்:
- பட்டபடிப்பு -(8வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி/தோல்வி)
- உடல் ஊனம் அற்றவராக இருத்தல் வேண்டும்.
- ஓட்டுநர் உரிமம் மற்றும் உரிய ஆவணங்கள் பெற்றிருக்க வேண்டும், 2 வருடத்திற்கு மேலாக முன் அனுபவம் பெற்ற டிபண் பணியாளராக இருத்தல் அவசியம்.
- உள்ளூர் விண்ணப்பதாரராகவும் இருத்தல் அவசியம்.
விண்ணப்பக்கும் முறை:
விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவரின் இணையதள முகவரியில் https://vellore.nic.in/notice_category/recruitment/ பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
பூத்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாக அல்லது தபால் மூலமாக 20.06.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் கீழ்க்கண்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய இடம் - அலுவலக முகவரி:
மாவட்ட சமூகநல அலுவலகம்,
“பி” பிளாக், 4 வது தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
சத்துவாச்சாரி, வேலூர் - 632009.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்ழய கடைசி நாள்:20.06.2024.
Click here to download the Application Form