சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்)- என்பிடெல், இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் துறையான விளையாட்டு அறிவியல் பாடத்தில் 7 புதிய ஆன்லைன் படிப்புகளை அறிமுகப்படுத்துகிறது. இந்தப் பாடப்பிரிவுகளை ஆன்லைனில் கட்டணம் ஏதுமின்றி படிக்கலாம்.
கோட்பாடு மற்றும் நடைமுறை பயன்பாடு ஆகியவற்றுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதை இந்த விரிவான ஆன்லைன் படிப்புகள் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. இந்தியா மற்றும் தெற்காசிய உடல் அமைப்பு மற்றும் கலாச்சார அம்சங்களுக்கு ஏற்ப இப்பாடப்பிரிவுகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த 7 பாடப்பிரிவுகளுக்கான முதல் பேட்ச் வகுப்புகள் 19 பிப்ரவரி 2024 அன்று தொடங்குவதுடன், விண்ணப்பிக்கவும் அன்றே கடைசி நாளாகும். விண்ணப்பிக்க வேண்டிய என்பிடெல் இணையமுகவரி https://nptel.ac.in/courses.
இப்படிப்புகள் தொடர்பான அறிமுக வீடியோவை பின்வரும் இணைப்பில் காண்பதுடன் பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம்- https://drive.google.com/file/d/1eJ4nU3lDvJ5gs0NtCgFZ5M-wg_9pzOj5/view
தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் திட்டம் (NPTEL) கடந்த 2003-ல் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் மற்றும் 7 இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் (சென்னை, பம்பாய், தில்லி, கான்பூர், காரக்பூர், கவுகாத்தி, ரூர்க்கி) தொடங்கப்பட்டது.
இப்பாடத்திட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கிய ஐஐடி மெட்ராஸ் என்பிடெல் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ், "இந்த விரிவான படிப்புகள் இந்தியாவை மையமாகக் கொண்ட விளையாட்டுத் தேவைகளை நிறைவுசெய்வதுடன், சிறந்த அனுபவத்தை அளிக்கக்கூடிய அணுகுமுறையை ஊக்குவிக்கும். இந்தியாவில் வேகமாக விரிவடைந்து வரும் போட்டி விளையாட்டுகளுடன் விளையாட்டுக் களங்களில் நுணுக்கங்களை அறிந்திருப்போருக்கான தேவை அதிகளவில் இருந்துவருகிறது. செயல்திறனை மேம்படுத்துதல், உணவு மற்றும் பயிற்சி அதிர்வெண்கள் போன்றவற்றைக் கண்காணித்தல், மீட்புத் திட்டங்களை உருவாக்குதல், விளையாட்டு அறிவியலுக்கான முழுமையாக அணுகுமுறையை வழங்குதல் போன்றவற்றை கற்பவர்கள் அறிந்துகொள்ள என்பிடெல் பாடத்திட்டங்கள் தயார்படுத்தும்" எனக் குறிப்பிட்டார்.
பரிந்துரைக்கப்பட்ட 12-ம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாகக் கொண்டு, வளர்ந்து வரும் இத்துறையை மேலும் அறிந்துகொள்ள என்பிடெல் அறிமுகப் பாடத்தைக் கற்கலாம். விளையாட்டு அறிவியல், பிசியோதெரபி, உடற்கல்வி உள்ளிட்ட இதர தொடர்புடைய துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு இப்பாடத்திட்டங்கள் பொருத்தமானவையாகும். இப்படிப்பு முடிந்த பின்னர், இதே துறையில் டிப்ளமோ அல்லது முதுகலை பட்டப்படிப்பை மாணவர்கள் தொடரலாம். ஐஐடி மெட்ராஸ்-ல் உள்ள விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்விற்கான உயர்சிறப்பு மையம் இந்த களத்திற்கான பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய தேசிய திறந்தவெளி பாடப்பிரிவுகளுக்கான (MOOCs) இணைய முகவரியான ஸ்வயம் (swayam.gov.in) இணையத்திலும் இந்தப் பாடங்கள் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப் பதிவு இலவசம். இறுதித் தேர்வை மையத்தில் நேரடியாக எழுத வேண்டியிருக்கும். மிகக்குறைந்த தேர்வுக் கட்டணம் அதாவது ஒரு பாடப்பிரிவுக்கு ரூ.1,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஐந்து முக்கிய (core) பாடப்பிரிவுகள், இரண்டு விருப்ப (elective) பாடப்பிரிவுகளை முடித்ததும் விளையாட்டு அறிவியலில் டொமைன் சான்றிதழ் வழங்கப்படும்.
டொமைனில் வழங்கப்படும் படிப்புகளின் முழுமையான பட்டியல்:
1. இந்திய மக்கள்தொகைக்கான வலிமை, உடலை தயார்படுத்தும் பயிற்சி பாடப் பக்கம்:
https://onlinecourses.nptel.ac.in/noc24_hs84/preview
2. விளையாட்டு மற்றும் செயல்திறன் ஊட்டச்சத்து பாடப் பக்கம்:
https://onlinecourses.nptel.ac.in/noc24_hs82/preview
3. விளையாட்டுப் பயிற்சி, சுமை மேலாண்மை மற்றும் மீட்பின் அடிப்படைகள் பாடப் பக்கம்:
https://onlinecourses.nptel.ac.in/noc24_hs87/preview
4. விளையாட்டு காயம் தடுப்பு& மறுவாழ்வுக்கான அவசியங்கள் பாடப் பக்கம்:
https://onlinecourses.nptel.ac.in/noc24_hs85/preview
https://onlinecourses.nptel.ac.in/noc24_hs81/preview
6. உடற்பயிற்சி உடலியல் மற்றும் விளையாட்டு செயல்திறன் அறிமுகம் பாடப் பக்கம்:
https://onlinecourses.nptel.ac.in/noc24_hs86/preview
ஆங்கிலத்தில் படிக்க:
NPTEL-IIT Madras launches specialized Free Courses in Sports Science
Indian Institute of Technology Madras (IIT Madras) - NPTEL is launching seven new online courses on Sports Science, which is a fast-growing field in India. The courses can be taken online free of cost.
These comprehensive online courses are aimed at bridging the gap between theory and practical applications. The courses are tailored for the Indian and South Asian body structure and cultural aspects.
The first Batch for these seven Courses will commence classes on 19th February 2024, which is also the last date to apply for the courses on NPTEL Website - https://nptel.ac.in/courses
A Promo Video on the courses can be viewed and downloaded from the following link - https://drive.google.com/file/d/1eJ4nU3lDvJ5gs0NtCgFZ5M-wg_9pzOj5/view
The National Programme on Technology Enhanced Learning (NPTEL) was initiated by seven Indian Institutes of Technology (Madras, Bombay, Delhi, Kanpur, Kharagpur, Guwahati and Roorkee) along with the Indian Institute of Science, Bangalore in 2003.
Highlighting the importance of this course, Prof. Andrew Thangaraj, Coordinator, NPTEL, IIT Madras, said, “This comprehensive set of courses will be a game-changer, addressing India-centric sports needs and promoting a well-rounded approach. There is a high demand for skilled personnel across sports domains with competitive sports expanding rapidly in India. These NPTEL courses equip learners to understand how to enhance performance, monitor diet and training frequencies, formulate recovery programs, and offer a holistic approach to sports science.”
With a recommended Class XII Pass as qualification, learners can take this introductory NPTEL course to explore this growing field. The courses are relevant for students pursuing Bachelor’s and Master’s in Sports Sciences, Physiotherapy, and Physical Education, and other related areas. On completion, students can pursue Diplomas or PG degrees in these areas. The Center of Excellence in Sports Science and Analytics at IIT Madras has introduced the courses in this domain.
Speaking about this course, Prof. Mahesh Panchagnula, Co-Principal Investigator, Center of Excellence in Sports Science and Analytics, IIT Madras, said, “These courses are for everyone. For anybody who is an enthusiast, a sports person, or who is interested in topics like strengthening, fitness, conditioning, sports, nutrition, and psychology.”
While the courses are being offered online on the National MOOCs portal of India, SWAYAM (swayam.gov.in), for which enrolment is free, the final exam will be in-person centre-based and proctored, which carries a nominal fee of Rs. 1,000/- per course.
These courses are targeted towards a broad audience including coaches, athletes, trainers, physiotherapists, nutritionists, among others. It covers crucial sports topics such as biomechanics, injury prevention, sports psychology, strength training for Indians, and cultural aspects of sports.
The areas covered include exercise physiology, movement science, sports nutrition, injury prevention, training fundamentals, strength conditioning, and sports psychology. Through theory and practical knowledge, participants will gain invaluable insights to build a career in sports science.
From exercise physiology fundamentals to practical applications like nutrition strategies and biomechanics techniques, attendees will gain foundational and in-depth knowledge to build a successful sports science career.
NPTEL contains the largest online repository in the world of courses in engineering, basic sciences and selected humanities and social sciences subjects. Its YouTube channel for NPTEL – most subscribed educational channel, 1 billion views and 42+ lakhs subscriber
Students can gain a Domain Certification in Sports Science by completing five Core courses and two Elective courses.
The complete list of courses offered in the domain:
1. Strength & Conditioning for the Indian Population
Course page: https://onlinecourses.nptel.ac.in/noc24_hs84/preview
2. Sports and Performance Nutrition
Course Page: https://onlinecourses.nptel.ac.in/noc24_hs82/preview
3. Fundamentals of Sports Training, Load Management and Recovery
Course page: https://onlinecourses.nptel.ac.in/noc24_hs87/preview
4. Essentials of Sports Injury Prevention & Rehabilitation
Course page: https://onlinecourses.nptel.ac.in/noc24_hs85/preview
5. Human Movement Science
Course page: https://onlinecourses.nptel.ac.in/noc24_hs81/preview
6. Introduction to Exercise Physiology & Sports Performance
Course page: https://onlinecourses.nptel.ac.in/noc24_hs86/preview
7. Sports Psychology
Course Page: https://onlinecourses.nptel.ac.in/noc24_hs83/preview