இந்திய கடற்படையின் 10+2 (பி.டெக்) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச பி.டெக் படித்து முடித்து இந்திய கடற்படையில் அதிகாரியாக பணிபுரிய விரும்பும் திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Officer (Executive & Technical Branch)
காலியிடங்கள்: 40
வயதுவரம்பு: 2.7.2005-க்கும் 1.1.2008-க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.
தகுதி: இயற்பியல், வேதியியல், கணித பாடங்கள் அடங்கிய பிரிவில் குறைந்தது 70 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். மேலும் JEE Main Exam - 2024 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
JEE Main Exam - 2024 தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதுகுறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் மாதம்: செப்டம்பர் 2024.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: பெங்களூரு, விசாகப்பட்டினம், கொல்கத்தா, போபால்
தேர்வு செய்யப்படுவோர் இந்திய கடற்படையால் வழங்கப்படும் 4 ஆண்டு இலவச பி.டெக் படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவர். அதாவது Applied Electronics, Mechanical, Communication, Electronics போன்ற ஏதாவதொரு பிரிவை தேர்வு செய்து படிக்கலாம்.
மேற்கண்ட படிப்பிற்கான அனைத்து செலவையும் இந்திய கடற்படையால் வழங்கப்படும். படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியமர்த்தப்படுவர்.
நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வோருக்கு ஏசி ரயில் கட்டணம் வழங்கப்படும் பி.டெக் படிப்பிற்கான வகுப்பு ஜனவரி 2025-இல் தொடங்கும். கேரளம் மாநிலம் எழிமலாவில் உள்ள இந்திய கடற்படை கல்லூரியில் 4 ஆண்டு பி.டெக் படிப்பு வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.joinindiannavy.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணபிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.7.2024
மேலும் விவரங்கள் அறிய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
Click here 👉 Notification Pdf