வேலூர் :
வேலூர் மாவட்டத்தில் 1- ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்காண மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகள் பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலூர் பிரிவு இணைந்து நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் வே.இரா. சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட பிரிவு அரசு பள்ளி மாணவ, மாணவியர்களின் திறன் கருதி அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஆகஸ்ட் 29ஆம் தேதி மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடக்க இருக்கிறது.
வேலூர் மாவட்டத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்காண மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகள் பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலூர் பிரிவு இணைந்து நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் இரா. சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
இப்போட்டிகள் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட உள்ளது.
அவைகள்,
மழலை நிலை பிரிவு: 1 - ஆம் வகுப்பு முதல் 3 - ஆம் வகுப்பு வரை.
இளநிலை பிரிவு: 4 - ஆம் வகுப்பு முதல் 5 - ஆம் வகுப்பு வரை.
நடுநிலை பிரிவு: 6 - ஆம் வகுப்பு முதல் 8 - ஆம் வகுப்பு வரை.
இளமுதுநிலை பிரிவு: 9 - ஆம் வகுப்பு முதல் 10 - ஆம் வகுப்பு வரை
முதுநிலை பிரிவு: 11 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை நடத்தப்பட உள்ளது.
அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் இப்போட்டியில் பங்கு பெற மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது,
முதல் கட்ட விளையாட்டு போட்டிகள்:
பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இடையே விளையாட்டு போட்டிகள் நடைபெறும்.
இரண்டாம் கட்ட விளையாட்டுப் போட்டிகள்:
பள்ளிகளில் நடைபெற்ற போட்டிகளில் முதல் இடத்தினை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு வட்டாரம் வாரியாக (Block level) விளையாட்டு போட்டிகள் நடைபெறும்.
மூன்றாம் கட்ட விளையாட்டுப் போட்டிகள்:
வட்டாரம் வாரியாக (Block level) நடைபெற்ற போட்டிகளில் முதல் இரண்டு இடத்தினை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.
மேலும் மாவட்ட போட்டிகளின் போது நடுநிலை, இளமுதுநிலை மற்றும் முதுநிலை பிரிவு மாணவ, மாணவியர்களுக்கு கூடுதலாக மாவட்டங்களில் நேரடியாக பங்கேற்க மூன்று போட்டிகள் வரையறுக்கப்பட்டுள்ளது.
அவைகள் பளுதூக்குதல் (Weightlifting) , குத்துச்சண்டை (Boxing) மற்றும் வளைக்கோள் பந்து (Hockey). இப்போட்டிகள் அனைத்தும் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெறும் பொழுது கூடுதலாக இப்போட்டிகள் நடத்தப்படும்.
இம்மூன்று போட்டிகளிலும் அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ள மாவட்ட அளவில் நேரடி வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியில் வெற்றி பெறும் மாணவ மாணவியர்களுக்கு SDAT- முத்தமிழ் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கம் காட்பாடியில் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்படும் எனமாவட்ட ஆட்சியர் வே.இரா. சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.