தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் கீழ் திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, சிப்காட் வளாகத்தில் அரசினர் தொழிற்சி நிலையம் துவங்கப்பட்டு 01/07/2024 முதல் நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இங்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவ மாணவியர்கள் SCVT பிரிவில்
1. சர்வேயர் 2. மெசனிஸ்ட் 3. ரெப்ரிஜரேட்டர் மற்றும் A/C டெக்னீசியன் மற்றும் 4. இன்பிளாண்ட் லாஜுஸ்டிக் அஸிஸ்டணட் போன்ற தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்று உடனடி வேலைவாய்ப்பு பெறலாம்.
இங்கு பயிலும் பயிற்சியாளர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள்
1. ரு. 750/- மாதாந்திர உதவித்தொகை
2. விலையில்லா மிதிவண்டி
3. விலையில்லா சீருடைகள்
4. விலையில்லா பாதுகாப்பு காலணிகள்
5. விலையில்லா பாடபுத்தகங்கள்
6. விலையில்லா வரைபட உபகரணங்கள்
7. பேருந்து சலுகை
8. 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவியர்களுக்கு மட்டும் மாதந்தோறும் ரு.1000/- மாதாந்திர உதவித்தொகை
9. பயிற்சிக் கட்டணம் முற்றிலும் இலவசம் என பல சலுகைகள் உள்ளன. வயது வரம்பு 14 வயது முதல் 40 வயது வரை மகளிருக்கு 14 வயது முதல் உச்ச வயது வரம்பு இல்லை.
எனவே மேற்குறிப்பிட்டுள்ள தொழிற்பிரிவுகளில் உடனடியாக நேரடி சேர்க்கை முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கும்மிடிப்பூண்டி, அவர்களை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
தொடர்பு கொள்ள திருமதி. க.இராஜலஷ்மி, முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், சிப்காட் வளாகம், கும்மிடிப்பூண்டி- 601 201. கைபேசி எண் 8248738413, 8838182450 என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர்.இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
.