ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலம்/ அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிடப்பள்ளிகளில் காலியாக உள்ள 38 இடைநிலை ஆசிரியர்கள்/ பட்டதாரி ஆசிரியர்கள் / முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்)சட்டம்-2016, பிரிவு-19-இன்படி, முற்றிலும் தற்காலிகமாக நிரப்பிட தகுதி பெற்ற நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
இதில் முன்னுரிமை விவரம் பின்வருமாறு:
- 1. வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள். (இல்லையெனில்)
- 2. வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள் (TET)
- 3. பட்டியலினத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- 4. பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- 5. மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள்.
கல்வித்தகுதி
- 1. வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள் (TET-Paper-I)
- 2. முதுநிலை பட்டதாரி ஆசிரியருக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் இல்லையெனில் இல்லம் தேடிக் கல்வித்திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்க்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- 3. இடைநிலை ஆசிரியர்களுக்கான தற்போதைய நடைமுறையில் உள்ள அரசு விதிகளில் உள்ளவாறு பின்பற்றப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
- விண்ணப்பதார்ர்களிடமிருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவோ/ அஞ்சல் மூலமாக உரிய கல்வித் தகுதி சான்றுகளுடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் 22..07.2024 அன்று முற்பகல் 11.00 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
காலிப்பணியிட விவரம்
1.ஆதிதிராவிடர் நலப்பள்ளி இடைநிலை ஆசிரியர் -SMC Post
வ.எண். - பள்ளியின் பெயர் - காலிப்பணியிட எண்ணிக்கை
1. அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, அந்தியூர் காலனி - 12. பழங்குடியினர் நல உண்டு உறைவிடப்பள்ளி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரம்
வ. எண். - பள்ளியின் பெயர் / காலிப்பணியிட ஆசிரியர் விவரம் (பாடவாரியாக) காலிப்பணியிட எண்ணிக்கை
1. அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி, ஆசனூர், ஈரோடு மாவட்டம்.
தமிழ்-1, தாவரவியல்-1, விலங்கியல்-1 = 3
2. அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி, பர்கூர், ஈரோடு மாவட்டம்
தமிழ்-1, உயிரியல்-1 வேதியியல்-1 பொருளியல்-1 = 4
ஆகமொத்தம் - 7
3.பழங்குடியினர் நல உண்டு உறைவிடப்பள்ளி இடைநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரம்
வ. எண். பள்ளியின் பெயர் காலிப்பணியிட எண்ணிக்கை
1. அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட நடுநிலைப்பள்ளி, குட்டையூர், ஈரோடு மாவட்டம். - 1
2. அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட நடுநிலைப்பள்ளி, சோளகணை, ஈரோடு மாவட்டம். - 1
3. அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட நடுநிலைப்பள்ளி, கத்திரிமலை, ஈரோடு மாவட்டம். - 1
4. அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட நடுநிலைப்பள்ளி, நகலூர், ஈரோடு மாவட்டம். -1
5. அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட நடுநிலைப்பள்ளி, கானக்கரை அட்ரோடு, ஈரோடு மாவட்டம். - 1
6. அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட தொடக்கப்பள்ளி, தலமலை, ஈரோடு மாவட்டம். - 2
7. அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட தொடக்கப்பள்ளி, கொங்காடை, ஈரோடு மாவட்டம். - 1
8. அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட தொடக்கப்பள்ளி, ஆசனூர், ஈரோடு மாவட்டம். - 1
9. அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட தொடக்கப்பள்ளி, ஒந்தனை, ஈரோடு மாவட்டம். - 1
ஆக மொத்தம்=10
4. பழங்குடியினர் நல உண்டு உறைவிடப்பள்ளி தொகுப்பூதிய பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரம்
வ. எண். பள்ளியின் பெயர் - பட்டதாரி ஆசிரியர் பாடம் காலிப்பணியிட எண்ணிக்கை
1. அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி, கெத்தேசால், ஈரோடு மாவட்டம்.
அறிவியல் - 1
2. அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி, தலமலை, ஈரோடு மாவட்டம். -
சமூக அறிவியல் 1
3. அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி, ஆசனூர், ஈரோடு மாவட்டம்.. /
கணிதம் 1
4. அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட நடுநிலைப்பள்ளி, குட்டையூர், ஈரோடு மாவட்டம்.
ஆங்கிலம் 1
5. அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட நடுநிலைப்பள்ளி, பெஜலெட்டி, ஈரோடு மாவட்டம்.
அறிவியல் 1
6. அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட நடுநிலைப்பள்ளி, சோளகணை, ஈரோடு மாவட்டம்.
ஆங்கிலம் 1
7. அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட நடுநிலைப்பள்ளி, சோளகணை, ஈரோடு மாவட்டம்.
கணிதம் 1
8. அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட நடுநிலைப்பள்ளி, சோளகணை, ஈரோடு மாவட்டம்.
அறிவியல் 1
9. அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட நடுநிலைப்பள்ளி, நகலூர், ஈரோடு மாவட்டம்.
அறிவியல் 1
10. அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட நடுநிலைப்பள்ளி, குட்டையூர், ஈரோடு மாவட்டம்.
அறிவியல் 1
11. அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட நடுநிலைப்பள்ளி, கத்திரிமலை, ஈரோடு மாவட்டம்.
கணிதம் 1
12. அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட நடுநிலைப்பள்ளி, கத்திரிமலை, ஈரோடு மாவட்டம்.
அறிவியல் 1
13. அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட நடுநிலைப்பள்ளி, கானக்கரை, ஈரோடு மாவட்டம்.
அறிவியல் 1
14. அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட நடுநிலைப்பள்ளி, கிணத்தடிசோளகா, ஈரோடு மாவட்டம்.
கணிதம் 1
15. அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட உயர்நிலைப்பள்ளி, கொங்காடை, ஈரோடு மாவட்டம்.
அறிவியல் 1
16. அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட உயர்நிலைப்பள்ளி, கொங்காடை, ஈரோடு மாவட்டம்.
சமூக அறிவியல் 1
17. அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட உயர்நிலைப்பள்ளி, தலமலை, ஈரோடு மாவட்டம்.
ஆங்கிலம் 1
18. அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட உயர்நிலைப்பள்ளி, தலமலை, ஈரோடு மாவட்டம்.
அறிவியல் 1
19. அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி, பர்கூர், ஈரோடு மாவட்டம்.
கணிதம் 1
20. அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி, பர்கூர், ஈரோடு மாவட்டம்.
சமூக அறிவியல் 1
மொத்தம் = 20
மேற்கண்ட ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ. 12,000/-, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15,000/- முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.18,000/- என்ற விகிதங்களில் கல்வி ஆண்டு முடியும் வரை (கோடை விடுமுறை தவிர்த்து) அல்லது காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் ஒதுக்கீடு செய்யப்படும் ஆசிரியர்களை கொண்டு முறையாக நிரப்ப படும் வரை ஊதியம் வழங்கப்படும்.
தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் காலிப்பணியிடத்திற்கு தகுதி பெற்ற நபர்கள் உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் எழுத்து மூலமான விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், கூடுதல் ஆட்சியர் வளாகம், நான்காம் தளம், ஈரோடு - 638 011 என்ற முகவரிக்கு நேரடியாகவோ / அஞ்சல் மூலமாகவோ 22.07.2024 அன்று முற்பகல் 11.00 மணிக்குள் (Email address dadwoerd@gmail.com <mailto:dadwoerd@gmail.com> Phone No.0424 - 2260455) அனுப்பலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு - செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், ஈரோடு மாவட்டம்.