காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதியதாக துவங்கியுள்ள ஒரகடம் (சிப்காட் தொழிற் பூங்கா) அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 100% சேர்க்கை மேற்கொள்ளும் பொருட்டு 31.07.2024 வரை நேரடி மாணவர் சேர்க்கை (Spot Admission) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளதாவது,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதியதாக துவங்கியுள்ள ஒரகடம் (சிப்காட் தொழிற் பூங்கா) அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 100% சேர்க்கை மேற்கொள்ளும் பொருட்டு 31.07.2024 வரை நேரடி மாணவர் சேர்க்கை (Spot Admission) நடைபெறுகிறது.
அதன்படி, பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஒரகடம், சேர்க்கை உதவி மையத்தினை அணுகவும்.
Mechanic Motor Vehicle (SCVT) கம்மியர் மோட்டார் வாகனம், Mechanic Refrigeration and Air-Conditioning Technician (SCVT) குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுப்படுத்தும் தொழில் நுட்பவியலாளர், Electronics Mechanic (SCVT) கம்மியர் மின்னணுவியல், Mechanic Electrical Vehicle (NCVT) மெக்கானிக் எலக்ட்ரிக் வண்டி, Advanced CNC Machining Technician (NCVT)அட்வான்ஸ்டு CNC மிஷினிங் டெக்னிசியன் ஆகிய தொழிற் பிரிவுகளுக்கு இரண்டு ஆண்டு கால பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும், Manufacturing Process Control and Automation (NCVT) மேனுபேக்சரிங் ப்ராசஸ் கண்ட்ரோல்& ஆட்டோமேசன் மற்றும் Industrial Robotics and Digital Manufacturing Technician (NCVT) (இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னிசியன்) பிரிவிற்கு ஓராண்டு பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி கட்டணம் இல்லை
அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சி காலத்தில் பயிற்சி கட்டணம் ஏதுமில்லை.
மாதம் உதவித்தொகை ரூ.750
பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அரசு உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ. 750/- (ரூபாய் எழுநூற்று ஐம்பது மட்டும்), விலையில்லா மிதிவண்டி, இரண்டு செட் சீருடைக்கான துணி, தையற் கூலி, இலவச புத்தகங்கள், இலவச சேப்டி ஷீ, இலவச பஸ் பாஸ் ஆகியன வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ,ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
முகவரி
மேலும், விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஒரகடம் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 9444908701 /9445943451/ 8838277278.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.