காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM), மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (DMMU), விருப்பமுள்ள தணிக்கையாளர்கள் (அ) தணிக்கை நிறுவனங்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
சுய உதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள், வட்டார அளவிலான குழு கூட்டமைப்புகளின் தணிக்கைக்கான தணிக்கையாளர்கள் அல்லது தணிக்கை நிறுவனங்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
சுயஉதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள், வட்டார அளவிலான குழு கூட்டமைப்புகளின் தணிக்கைக்கு விருப்பமுள்ள தணிக்கையாளர்கள் அல்லது தணிக்கை நிறுவனங்கள் அரசு துறைகள் (அ) அரசு திட்டங்கள் (அ) தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் குறைந்த பட்சம் தணிக்கையில் ஐந்து ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் சுயஉதவிக் குழுக்கள் வாழ்வாதாரத் திட்ட நடவடிக்கைகள் போன்றவற்றில் நல்ல முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வுக்கான தகுதிகள் மற்றும் விதிமுறைகள் மற்றும் பிற விவரங்கள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட அரசு இணையதளமான Kancheepuram.nic.in -ல் காணலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்
திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (DMMU), தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM), காஞ்சிபுரம் மாவட்டம் என்ற முகவரிக்கு 12.07.2024 அன்று அல்லது அதற்கு முன் சென்றடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
.