தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக 12 ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களுக்கு B.Sc (Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நேர பட்டபடிப்பு, ஒன்றரைஆண்டு முழு நேர உணவு தயாரிப்பு (Diploma Food Production) பட்டயப்படிப்பு.
மேலும் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினஞர் (Craftmanship Course in Food Production&Patisserie) உணவு மற்றும் பான சேவையில் கைவினைத் திறன்படிப்பு, (Craftmanship Course in Food & Beverage Service) பேக்கரி மற்றும் மிட்டாய் துறையில் பட்டயப்படிப்பு ,(Diploma in Bakery&Confectionary) சேர்ந்து படித்திடவும், படிப்பு முடிந்தவுடன், நட்சத்திர விடுதிகள், உயர்தரஉணவகங்கள், விமானம் துறை, கப்பல் துறை மற்றும் சேவை துறைச்சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிய வழிவகை செய்யப்படும்.
சென்னை தரமணியிலுள்ள Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition என்ற நிறுவனமானது ISO 9001 2015 தரச்சான்று பெற்ற நிறுவனமாகும். இந்நிறுவனமானது ஒன்றிய அரசின் சுற்றுலா துறையின் கீழ், அமைய பெற்ற ஒருதன்னாட்சி நிறுவனம்,
மேலும் இந்நிறுவனம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது Amercian Council of Business அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ்நாட்டில்உள்ளLycee Nicolas Appert Catering நிறுவனத்தில்புரிந்துணர்வுஒப்பந்தம்செய்துள்ளது. Hotel Management Institute Survey 2022- ன் படி உலகளாவிய மனிதவள மேம்பாட்டு மையத்தில் இரண்டாவதாக இடம்பெற்றுள்ளது. CEO WORLD MAGAZINE நடத்திய உலகளவில் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளில் உலக தரவரிசையில் பதின்மூன்றாவது இடத்தில் இந்நிறுவனம் இடம் பெற்றுள்ளது.
தகுதி
மேற்கண்ட நிறுவனத்தில் படிக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தாவராக இருக்கவேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.
குடும்பவருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்கவேண்டும்.
இப்படிப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும். மேலும் ஆரம்பகால மாத ஊதியமாக ரூ.25,000/- முதல் ரூ.35,000/- வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000/- முதல் ரூ.70,000/- வரை பதவி உயர்வின் அடிப்படையில் மாத ஊதியமாக பெறலாம்.
மேற்கண்ட பயிற்சி நிறுவனத்தில் சேர்வதற்கு தாட்கோ இணையத்தளம் www.tahdco.com என்ற முகவரியில்18.08.2024-க்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் வே.இரா. சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள மாவண-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தரமணியிலுள்ள Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition கல்லூரி இணையதள முகவரி
Click here to Apply👇
Student Registration - TAHDCO with Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition for B.Sc - Hospitality & Hotel Administration/ Diploma in Food Production/ Craftmanship in Food Production & Patisserie with placement Programme