சென்னை:
சவுதி அரேபிய அரசு மருத்துவமனையில் பணியாற்ற மருத்துவ ஆலோசகர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் தேவைப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் இன்று (ஆக.29) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வளைகுடா நாடான சவுதி அரேபிய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மருத்துவமனையில் பணியாற்ற மருத்துவ ஆலோசகர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள். மருத்துவ கல்வித் தகுதியுடன் குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவம் அவசியம். வயது 55-க்குள் இருக்க வேண்டும். இதற்கான நேர்காணல் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.
பணிக்கு தேர்வுசெய்யப்படுவோருக்கு ஊதியத்துடன் உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவையும் வழங்கப்படும். ஊதியம், பணி விவரம் தொடர்பான கூடுதல் விவரங்களை 9566239685 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொண்டு பெறலாம்.
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு எந்தவொரு இடைத்தரகரோ ஏஜெண்டுகளோ கிடையாது.
எனவே, விண்ணப்பதாரர்கள் இந்நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.omcmanpower.tn.gov.in நேரடியாக பதிவுசெய்து பயன்பெறலாம் என்று கூறியுள்ளார்.
அறிவிப்பு :
Title
WANTED Consultant, Specialist - ONLINE INTERVIEWLocation
SAUDI ARABIA / SAUDI ARABIADesignation
Consultant, SpecialistNo. of vacancies
12Salary Ranges
367000 - 482000Gender
BothAge Limits
21 - 55Job Category
Allopathy DoctorsLast date of application
07-Sep-2024Interview Date
WILL BE MENTINED LATERInterview Venue
ONLINEEducational Requirements
M.D MEDICINE
Other Benefits:
- Free Accommodation & Transportation
- Air Ticket
- Other benefits as per Saudi Labour Law
Any other special requirements
CONSULTANT Candidates
CRITICAL CARE,NEUROLOGY, VITREORETINAL OPHTOLMOGIST, INTERVENTIONAL RADIOLOGY, CARDIAC CATHETERIZATION, PEDIATRIC I,C,U ,NEONATAL I.C.U,EMERGINCY,BREAST SURGERY
SPECIALIST Candidates
EMERGENCY, MEDICENE, GENERAL SURGIRY