வேலூர் மாவட்டத்தில் 2022- 2023 மற்றும் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவ / மாணவியர்களுக்கு HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பினை (B.Sc. Computing Designing) B.Com, BCA & BBA) பெற விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வே.இரா. சுப்புலெட்சுமி, தெரிவித்துள்ளார்.
Birla Institute of Technology and Science |
HCL Techbee Early Career Programme மூலமாக பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு சிறு வயதிலேயே உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியினை துவங்க HCL Technologies-ல் ஒரு வருடகால பயிற்சி அளித்து நிரந்தர வேலைவாய்ப்புடன் இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ்வாய்ந்த பிட்ஸ்பிலானி கல்லூரியில் B.Sc (Computing Designing) பட்டப்படிப்பு, தஞ்சாவூர் மாவடத்திலுள்ள சாஸ்தரா பல்கலை கழகத்தில் BCA பட்டப்படிப்பு அமிட்டி பல்கழைக் கழகத்தில் BCA/BBA/B.Com மற்றும் நாக்பூரிலுள்ள ஐஐஎம் பல்கலைகழகதில் Integrated Management பட்டப்படிப்புகளில் சேர்ந்து படிதிடவும் வாய்ப்பும் பெற்று தரப்படும்.
தகுதி
- மேற்காணும் வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சி பெறுவதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவ / மாணவிகளாக இருக்க வேண்டும்.
- பன்னிரெண்டாம் வகுப்பில் 2022-2023 ஆம் ஆண்டுகளில் மொத்த மதிபெண்ணில் 60 சதவீதம் மற்றும் 2023-2024 ஆம் ஆண்டுகளில் மொத்த மதிபெண்ணில் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- குடும்ப ஆண்டு வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். HCL மூலம் நடத்தப்படும் Entrance Examination தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி
இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும் ஒரு வருட பயிற்சிக்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும்.
ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.17,000/- முதல் ரூ.22,000/- வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000/- முதல் ரூ.70,000/- வரை பதவி உயர்வின் அடிப்படையில் மாத ஊதியாமாக பெறலாம்.
மேற்கண்ட திட்டம் தொடர்பான விவரங்கள் மற்றும் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையத்தளம் www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் வே.இரா. சுப்புலெட்சுமி, தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள மாவண-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click here to Apply 👇
Student Registration - TAHDCO with HCL Graduate Employment Programme