வேலூர் :
வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 20.09.2024 அன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் வேலை நாடுநர்கள் கலந்துகொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலை வாய்ப்பு முகாம் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்திட ஆணையர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அவர்களால் அறிவுறுத்தப்பட்டதின் அடிப்படையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது வருகிற 20.09.2024 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
இம்முகாமில் 40-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கு பெறவுள்ளது. இந்நிறுவனங்களுக்கு 10th, 12th, ITI, DIPLOMA, DEGREE ஆகிய கல்வித்தகுதி தேர்ச்சி பெற்ற வேலைநாடுனர்கள் கலந்து கொள்ளலாம்.
ஆகவே. தனியார்துறை பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் வருகின்ற 20.09.2024 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.