ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் தெரிவித்தாவது,
காஞ்சிபுரம் மாவட்டம், அரசாணை நிலை எண்.66, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள்.03.09.2014-இன்படி இயன்முறையில் மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம் 2013-இன்படி மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு அமைத்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
மேற்படி குழு உறுப்பினர் கீழ்கண்டவாறு தேர்வு செய்யப்படுகிறார்கள். எனவே மேற்படி குழுவினை அமைக்க உறுப்பினர்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ 06.09.2024-க்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கீழ்காணும் உறுப்பினர்களைக்கொண்டு மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு அமைக்கப்படும்.
வ.எண் / பெயர் / பதவி
1. தலைவர் - மாவட்ட ஆட்சித்தலைவர்
2.செயல் உறுப்பினர் - மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்
3. உறுப்பினர்கள்
- மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் - ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த மாவட்டத்தில் தேர்தெடுக்கப்பட்டவர்கள் மட்டும்
- மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
- உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்)
- ஆணையர், காஞ்சிபுரம் மாநகராட்சி
- முதன்மை சுகாதார ஆய்வாளர் தெற்கு இரயில்வே, காஞ்சிபுரம்
- மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதை ஒழித்தல் குறித்த பொது தொண்டில் ஆர்வம் உள்ள 4 நபர்கள்
- மாவட்ட அளவில் வங்கி குழு உறுப்பினர் ஒருவர்
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.