மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், டாடா எலெக்ட்ரானிக்ஸ் (ஓசூர்) நிறுவனத்திற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளதாவது,
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 05.09.2024 மற்றும் 06.09.2024 ஆகிய இரண்டு தினங்களில் (வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை) காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு (கலை மற்றும் அறிவியல் பிரிவு) தேர்ச்சி பெற்ற 19 வயது முதல் 25 வயது வரை உள்ள பெண்களை தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதச் சம்பளம் ரூபாய்.19,629/-ம், உணவு தங்கும் இடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். இப்பணிக்காலியிடங்கள் முழுமையும் பெண் வேலைநாடுநர்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் Mobile உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனத்தில் (Electronics Manufacturing Sector) ஒரு வருட பணி அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். 15 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும்.
பயிற்சியின் போதும் மாதம் ரூபாய்.19,629/-ம், உணவு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். பயிற்சி முடித்த பின்னர் நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தகுதியும் விருப்பமும் உள்ள வேலைநாடுநர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 05.09.2024 மற்றும் 06.09.2024 ஆகிய இரண்டு தினங்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறும் மேலும் விவரங்களுக்கு 044-27237124, 044 - 27238894 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.