2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நலிந்த நிலையிலுள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளையாட்டுத்துறையில் சர்வதேச / தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6000/- வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதள முகவரி www.sdat.tn.gov.in மூலம் வரவேற்கப்படுகிறது.
தகுதிகள்
(அ) குறைந்தபட்ச தகுதி
- சர்வதேச / தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருத்தல் வேண்டும்.
- சர்வதேச / தேசிய போட்டிகளில் முதலிடம் / இரண்டாமிடம் / மூன்றாம் இடங்களில் வெற்றிபெற்றிருத்தல் வேண்டும்.
(ஆ) தகுதியான விளையாட்டுப் போட்டிகள்
- ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள்.
- அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகள்.
- இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளங்களால் நடத்தப்பட்ட சர்வதேச / தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள்.
- ஒன்றிய அரசின் விளையாட்டு அமைச்சகம் / இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட / தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள்.
(இ) வயதுவரம்பு
- 2024ம் வருடம் 31 ஆகஸ்ட் மாதம் (31.08.2024) 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.
(ஈ) மாத வருமானம்
- விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6000/-ஆக இருத்தல் வேண்டும்.
- ஒன்றிய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் / மாநில அரசின் ஓய்வூதியம் பெறுவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.
- முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் (Veteran / Masters Sports Meet) வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.
(உ) முக்கிய தேதிகள் மற்றும் நேரம்
- இவ்வாணைய இணையதளத்தில் விண்ணப்பிக்க துவக்க நாள் : 01.09.2024
- இவ்வாணைய இணையத்தில் விண்ணபிக்க கடைசி நாள் மற்றும் நேரம் : 30.09.2024 மாலை 6 மணி வரை .
ஆகவே, திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த சிறந்த முன்னாள் விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறும் வகையில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களை 7401703482 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் இ,ஆ,ப., அவர்கள் தெரிவித்தார்கள்
இணையதள முகவரி www.sdat.tn.gov.in