காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான நேரடி வேலைவாய்ப்பு முகாம் (Job Mela) மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தகவல் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான நேரடி வேலைவாய்ப்பு முகாம் (Job Mela) 21.09.2024 சனிக்கிழமை அன்று காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
தீன் தயாள் உபத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா (DDU-GKY) திட்டத்தின் கீழ், 18 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண் இருபாலருக்கும், மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் மூலம் தேர்வு செய்து பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் மூலமாக நேரடி வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
மேலும் தனியார் நிறுவனங்களில் பணியாற்ற ஏதுவாக தகுதியான இளைஞர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதையொட்டி 21.09.2024 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் மாவட்ட அளவிலான நேரடி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
எனவே முகாமில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற (10th, +2, Diploma, Any Degree, Engineering) இளைஞர்கள் இருபாலரும் கலந்துகொண்டு நேரடி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பினை பெற்று பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.