2024-25-ம் ஆண்டிற்கான பண்ணைசாரா செயல்பாடுகளின் கீழ் பசுமை தொழில் நிறுவனம் அமைத்திட தகுதியுடைய மகளிர் சுய உதவிக்குழுக்களிடமிருந்து கீழ்க்காணும் தொழில் வகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராஜ கோபால் சுன்கரா செய்திக்குறிப்பில்
பசுமை தொழில் வகைகள் :
1. கைத்தறி, நெசவு, விசைத்தறி தொழில் நிறுவனம்.
2. மண்பாண்டம்
3. கைவினைப் பொருட்கள் உற்பத்தி நிறுவனம்
4. நவீன ஆடை உற்பத்தி நிறுவனம்
5. உணவு பொருட்கள் உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல் நிறுவனம்
6. வனம் சாh;ந்த உற்பத்தி நிறுவனங்கள்
7. பிற நிறுவனங்கள் (சிறு குறு மற்றும் நடுத்தரம் நிறுவனம்)
பசுமை தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்கான நோக்கம் :
1. பசுமை தொழில் நிறுவன மாதிரிகளை கட்டமைத்து சுற்றுசூழலுக்கு உகந்த பசுமை செயல்பாடுகளை முன்னெடுத்தல்.
2. பசுமை தொழில் நிறுவன செயல்பாடுகள் வழியாக சுய உதவிக்குழு உறுப்பினா;களுக்கு வேலை வாயப்புகளை உருவாக்கி, லாபத்துடன் கூடிய உற்பத்தி மற்றும் விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்தி பொருளாதார ரீதியாக அங்காடிகளை மேம்படுத்துதல்.
3. பசுமை தொழில் நிறுவனங்களுக்கு அரசு துணை மூலம் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் அணுகுவதற்கும், பெறுகுவதற்கும் தேவையான வழிவகை செய்தல்.
தகுதிகள் :
👉 தேர்வு செய்யப்படும் தொழில் அல்லது தொழில் முனைவோர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் தொழில் முனைவோர் கண்காணிப்பு இணையத்தில் (TNSRLM / EMS ) கட்டாயம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
👉 நிறுவனம் தொடங்கி ஓராண்டுக்கு மேல் தொடர் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
👉 நிறுவனம் கட்டாயம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம் தரச் சான்று (MSME / Udhyog adhar / FSSAI ) பெற்று இருக்க வேண்டும்.
👉 தமிழ்நாடுமாசுக்கட்டுப்பாடுவாhpயத்தின் விதிமுறைக்கு உட்படுத்தப்பட்ட வெள்ளை, பச்சை மற்றும் ஆரஞ்சு வகை தொழில் நிறுவனங்களால் ஏதேனும் ஒன்றில் தகுதி பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும்.
மேற்கண்ட தகுதிகளுக்கு உட்பட்டு பசுமைத் தொழில் நிறுவனங்கள் விண்ணப்பங்களை 11.10.2024-ம் தேதிக்குள் மகளிர் திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்கக் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இதரவிவரங்கள் குறித்து தெரிந்துகொள்வதற்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், (மகளிர் திட்டம்) முதல் தளம், பூமாலை வணிக வளாகம், குமலன்குட்டை, பெருந்துறைசாலை, ஈரோடு - 638 011 என்ற முகவரியிலும் அல்லது 88389 19268 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.