ஓராண்டு தொழில் முனைவோர் சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பின் படி, இ.டி.ஐ.ஐ. தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தமிழ்நாடு இடிஐஐ அகமதாபாத் நிறுவனத்துடன் இணைந்து, “தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம்”, என்ற தலைப்பில் ஓராண்டு சான்றிதழ் படிப்பைத் தொடங்கவுள்ளது.
அகமதாபாத் பாடத் திட்டத்தை தீர்மானிக்கும், பாடத்தின் ஒரு பகுதி அவர்களின் பேராசிரியர்களால் நேரடியாக நடத்தப்படும். இந்த வகுப்புகள், வரும் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த பாடத் திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ. 80,000 கட்டணமாக அரசு நிர்ணயித்துள்ளது. இதில் சேர தகுதி, நிபந்தனைகள் வயது 21 முதல் 40 வயதுக்குட்பட்ட இளம் பட்டதாரிகள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயனடையலாம்.
இந்த பாட நெறி ஒரு தொழில் முனைவோர் சான்றிதழ் படிப்பாகும். வேலைவாய்ப்புக்கான படிப்பு அல்ல. எனவே தொழில் முனைவோராக மாற முயற்சிக்கும் ஆர்வலர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும். பயிற்சி முழுவதும் குளிரூட்டப்பட்ட வகுப்பறைகளில் மிக உயர்ந்த தரத்திற்கு நடத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இ.டி.ஐ.ஐ. தலைமை அலுவலக எண் (8668107552, 8668101638) மற்றும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட இடிஐஐ ஒருங்கிணைப்பாளர் திரு.சீனிவாசன் (9677835172) அவர்களை தொடர்புகொள்ளவும் மற்றும் அனைத்து விவரங்களையும் இந்த https://www.editn.in/ https://youtube.com/shorts/GBnEEtTQiuI?feature=share, இணையதளத்தில் காணலாம்.
இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
click here : https://www.editn.in/