மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான புதியது/புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை (Fresh/Renewal Applications) பெற 15/11/2024ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளத.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளதாவது,
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் (Central Universities) பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (BC,MBC/DNC) மாணவ/மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ/மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக கற்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம் மற்றும் இதர கட்டாய கட்டணம் ஆகிய கட்டணங்களுக்காக மாணாக்கரால் செலுத்திய தொகை அல்லது ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2.00 இலட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
மேற்படி, கல்வி உதவித்தொகைக்கு 2024-25ஆம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் (Fresh/Renewal Applications) விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணாக்கர்கள் கீழ்கண்ட முகவரியிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தையோ, மிகப்பிற்படுத்தப்படோர் / சீர்மரபினர் நல இயக்ககத்தையோ அல்லது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm என்ற இணையதள முகவரியில் சென்று (Fresh / Renewal Applications) விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் 2024-25ஆம் நிதியாண்டிற்கான புதியது (Fresh) மற்றும் புதுப்பித்தல் (Renewal) கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு பூர்த்தி செய்த புதுப்பித்தல் (Renewal) விண்ணப்பங்களை 15.12.2024-க்குள் மற்றும் புதியது (Fresh) விண்ணப்பங்களை 15.01.2025-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
முகவரி
ஆணையர்,
பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் (அல்லது)
மிகப்பிற்படுத்தப்படோர் / சீர்மரபினர் நல இயக்ககம்,
எழிலகம் இணைப்பு கட்டடம்,
2-வது தளம், சேப்பாக்கம், சென்னை-5.
தொலைபேசி எண்.044-29515942
மின்னஞ்சல் முகவரி tngovtiitscholarship@gmail.com
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.