மாவட்டம் முழுவதும் குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இத்தகைய இல்லங்கள் அனைத்தும் பின்வரும் பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கான சட்டங்களின்படி பதிவு செய்யப்பட்டு செயல்பட வேண்டும்.
வ. எண். / விடுதிகள் (ம) இல்லங்கள் / சம்மந்தப்பட்ட துறை / பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கான சட்டப்பிரிவு
1. குழந்தைகள் இல்லங்கள்
குழந்தைகள் நலன் (ம) சிறப்புச் சேவைகள் - இளைஞர் (நீதி பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015.
2. முதியோர்இல்லங்கள்
சமூக நலத்துறை - மூத்த குடிமக்களுக்கான சட்டம், 2007.
3. மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள்
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை - மாற்றுத்திறனாளிகள் உரிமைகள்சட்டம், 2016.
4. மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை - மாற்றுத் திறனாளிகள் உரிமைகள்சட்டம், 2016.
5. போதை பொருட்களுக்கு அடிமையானவர் களுக்கான மறுவாழ்வு இல்லங்கள்
தமிழ்நாடு மாநில மனநல ஆணையம் (State Mental Health Authority) - மனநல பாதுகாப்புச் சட்டம், 2017
6. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள்
சமூக நலத்துறை - பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்களுக்கான (ஒழுங்குமுறை) சட்டம், 2014.
7. மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள்
தமிழ்நாடு மாநில மனநல ஆணையம் (State Mental Health Authoriy) - மனநல பாதுகாப்புச் சட்டம், 2017.
அவ்வாறு பதிவு பெறாமல் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மனவளர்ச்சி குன்றியோர்கள், மாற்றுத்திறனாளிகள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுகளுக்கான மறுவாழ்வு இல்லங்கள் மற்றும் விடுதிகள் ஆகியவை உரிய முறையில் கீழ்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் இல்லங்கள் மற்றும் விடுதிகள் ஆகியவை உரியமுறையில் கீழ்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் / அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்க ஒரு மாதகால அவகாசம் வழங்கப்படுகிறது.
வ. எண் / விடுதிகள் (ம) இல்லங்கள் / விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் / அலுவலகம்
1. குழந்தைகள் இல்லங்கள் 👉 https://dsdcpimms.tn.gov.in (அல்லது) குழந்தைகள் நல அலுவலகம்
2. முதியோர் இல்லங்கள்👉 www.seniorcitizenhomes.tnsocialwelfare.tn.gov.in (அல்லது) மாவட்ட சமூக நல அலுவலகம்.
3. மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள் 👉 https://scd.tn.gov.in/ - and navigate to "Thiran Platform" (அல்லது ) மாற்றுத்திறனாளிகள்நல அலுவலகம்.
4. மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள் 👉 https://scd.tn.gov.in/ - and navigate to "Thiran Platform" (அல்லது ) மாற்றுத்திறனாளிகள்நல அலுவலகம்.
5. போதைபொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள் 👉 https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php (அல்லது) முதன்மை செயல் அலுவலர். தமிழ் நாடு மாநில நல ஆணையம், அரசு மனநல காப்பகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10 அவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
6. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் 👉 https://tnswp.com (அல்லது) மாவட்ட சமூக நல அலுவலகம்.
7. மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள்👉 https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php (அல்லது) முதன்மை செயல் அலுவலர், தமிழ் நாடு மாநில நல ஆணையம். அரசு மனநல காப்பகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10 அவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
இதன்படி, பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து இல்லங்கள் மற்றும் விடுதிகள் உடனடியாக மேற்காணும் இணையதளம் (Portal) / அலுவலகம் வாயிலாக ஒரு மாதகாலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க தவறும் பட்சத்தில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இவ்வில்லங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Sl. No. |
Hostels and Homes |
Related department |
Act for registration
and licence |
1. |
Children Care
Institutions/Children’s Homes |
Department of
Children Welfare and Special Services |
JUVENILE JUSTICE
(CARE AND PROTECTION) ACT, 2015 |
2. |
Old age Home |
Social Welfare
Department |
THE MAINTENANCE AND WELFARE OF PARENTS AND SENIOR CITIZENS ACT, 2007 |
3. |
Homes for the mentally retarded
|
Welfare of Differently Abled Persons Department |
THE RIGHTS OF PERSONS WITH DISABILITIES ACT, 2016 |
4. |
Homes for
Differently Abled |
Welfare of Differently Abled Persons Department |
THE RIGHTS OF PERSONS WITH DISABILITIES ACT, 2016 |
5. |
Rehabilitation homes for drug addicts
|
State Mental Health
Authority |
THE MENTAL HEALTHCARE ACT, 2017 |
6. |
Hostels for Women
and Children |
Social Welfare
Department |
TAMIL NADU HOSTELS AND HOMES FOR WOMEN AND CHILDREN (REGULATION)
ACT,2014 |
7. |
Homes for the mentally ill
|
State Mental Health
Authority |
THE MENTAL HEALTHCARE ACT, 2017 |
Rehabilitation homes and hostels for children, women, elderly, mentally
challenged, mentally retarded, differently abled, drug addicts operating in the
district without obtaining such registration are given a period of one month to
apply for registration in the below mentioned website / office in appropriate
manner.
Sl. NO. |
Hostels and Homes |
Website / Office to apply
|
1. |
Children Care Institutions/Children’s Homes |
https://dsdcpimms.tn.gov.in
(or) District Child Protection Unit, 317, K.T.S. Mani Street, Mamallannagar,
Kancheepuram. |
2. |
Old age Home |
www.seniorcitizenhomes.tnsocialwelfare.tn.gov.in (or) District
Social Welfare Office, District Collector office campus, Kancheepuram. |
3. |
Homes for the mentally retarded
|
https://scd.tn.gov.in/
- and navigate to "Thiran Platform" (or) Differently Abled Persons Welfare office, District Collector office campus, Kancheepuram. |
4. |
Homes for Differently Abled |
https://scd.tn.gov.in/
- and navigate to "Thiran Platform" (or) Differently Abled Persons Welfare office, District Collector office campus, Kancheepuram. |
5. |
Rehabilitation homes for drug addicts
|
https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php (or) Applicationscan be obtained from Chief Executive Officer, Tamil Nadu
State Welfare Commission, Government Mental Asylum, MedavakkamKulam Road,
Kilpakkam, Chennai-10. |
6. |
Hostels for Women and Children |
https://tnswp.com
(or) District Social Welfare Office, District Collector office campus,
Kancheepuram. |
7. |
Homes for the mentally ill
|
https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php Applicationscan
be obtained from Chief Executive Officer, Tamil Nadu State Welfare
Commission, Government Mental Asylum, MedavakkamKulam Road, Kilpakkam,
Chennai-10. |
Accordingly, all the homes and hostels operating without registration are advised to apply immediately through the above mentioned website (Portal) / office within a period of one month. In case of failure to apply within one month, appropriate action will be taken and these homes/hostels will be sealed.
This is Announced by Tmt. Kalaiselvi Mohan, I.A.S., District Collector, Kanchipuram District.
Issued by: Information and Public Relations
Officer, Kanchipuram District.