தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி (TAICO BANK) வேலூர் கிளையில் சிறு குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
கலைஞர் கடன் உதவி திட்டம்
தமிழ்நாடு அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி (TAICO BANK) வேலூர் கிளையில் சிறு குறு உற்பத்தி (MICRO Industries) நிறுவனங்கனுக்கு மிக குறைந்த வட்டியில் ஆண்டுக்கு 7% சதவிகித வட்டியில் ரூபாய் 20,00,000 வரை நடைமுறை கடன் (Term Loan ) மற்றும் மூலதன கடன் (Working Capital) வழங்கும் புதிய திட்டமான கலைஞர் கடன் உதவி (kalaingar credit assistance scheme) திட்டத்தின்கீழ் சிறு குறு நிறுவனங்களுக்கு அசையா சொத்து (விவசாய நிலம் தவிர)அடமானத்தின் பேரில் கடன் வழங்கப்படவுள்ளது.
கடன் பெற தகுதிகள்
1.இந்த திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்ச வயது 18ஆகவும் அதிகபட்ச வயது 65க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2.புதிய மற்றும் ஏற்கனவே இயங்கிவரும் சிறு குறு நிறுவனங்களாகவும் உற்பத்தி செய்யும் நிறுவனங்களாக இருக்க வேண்டும்.
3.தொழில் முனைவோருக்கு CIBIL Score 600க்கு குறையாமல் இருத்தல் அவசியம் மற்றும் (CMR) 6 புள்ளிகளுக்கு குறையாமலும் இரண்டு ஆண்டுக்கு இலாபத்தில் இருத்தல் அவசியம்.
4.பிற நிதி நிறுவனங்களிடமிருந்து உற்பத்தி சார்ந்த தொழிலுக்கு அதிக வட்டியில் கடன் பெற்றிருந்தால் வங்கியின் நிபந்தனைக்கு உட்பட்டு குறைந்த வட்டிக்கு மாற்றி கொள்ளலாம்.
5.வேலூர் மாவட்டத்தை சார்ந்த ஆர்வமுள்ள தொழில் முனைலோர்கள் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களான திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டத்தை சார்ந்த ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களும் இந்த திட்டத்தில் பயன் பெறலாம்.
6. மேலும் விவரங்களுக்கு அந்தந்த மாவட்ட தொழில் மையம் (District Industries Centre) பொது மேலாளர் மற்றும் கிளை மேலாளரை தொடர்பு கொள்ளவும்.
வேலூர் தாய்கோ வங்கி முகவரி
தாய்கோ வங்கி
No.6B, முதல் மாடி
பாலாஜி காம்பளக்ஸ் (Near Lic Office)
ஆற்காடு சாலை,
வேலூர்.632 004.
0416-2212597 மற்றும் 9843668547, 9787105249 என்ற தொலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் முகவரி
பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் காஞ்சிபுரம் – 603 501
கிளை மேலாளர், தாய்கோ வங்கி நெ.26-ஏ, திருக்கச்சி நம்பி தெரு, ஜெயலட்சுமி காம்ப்ளக்ஸ், காஞ்சிபுரம் – 631 501. (தொடர்பு எண்: 044-27223562)
தொடர்பு கொண்டு கடன் உதவி திட்டத்தில் பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.