ஈரோடு :
ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம்மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டத்தின் கீழ் கடன் பெற சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளதாவது,
ஈரோடுமாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இன மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடுபிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுகழகம் (TABCEDCO) மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்(TAMCO) மூலமாக தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில்கடன் போன்ற திட்டங்கள்செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
எனவே, இத்திட்டத்தின் கீழ்கடன் பெற விரும்புவோர்கான சிறப்பு முகாம்கள் ஈரோடு மாவட்டத்தில் கீழ்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.
ஈரோடு மாவட்ட கூட்டுறவு நகரவங்கியின்த லைமையகத்தில் 07.12.2024 அன்றும்,
கோபி கூட்டுறவு நகரவங்கியின் தலைமையகத்தில் 11.12.2024 அன்றும்,
ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைமையகம், அம்மாபேட்டை, அந்தியூர், அத்தாணி, பவானி, சென்னிமலை, சம்பத்நகர், கோபி, கவுந்தப்பாடி, கொடுமுடி, தாளவாடி, மொடக்குறிச்சி, நம்பியூர், பு.புளியம்பட்டி, சத்தியமங்கலம், சிவகிரி, டி.என்.பாளையம், பெருந்துறை, அரச்சலூர், அவல்பூந்துறை, காஞ்சிக்கோவில், குருமந்தூர், ஈரோடுபஜார்கிளை, சோலார், சூரம்பட்டிவலசு, மாணிக்கம்பாளையம், D.G.புதூர் மற்றும் சித்தோடு ஆகியகிளைகளில் 11.12.2024 மற்றும் 12.12.2024 ஆகிய தேதிகளிலும்,
ஈரோடு கூட்டுறவு நகரவங்கி முனிசிபல் காலனி கிளை, சென்னிமலைகூட்டுறவுநகரவங்கியின்தலைமையகம்மற்றும் சத்தியமங்கலம் கூட்டுறவு நகரவங்கியின் தலைமையகத்தில் 13.12.2024 அன்றும்,
பவானி கூடல் கூட்டுறவு நகரவங்கி தலைமையகத்தில் 20.12.2024 அன்றும்,
சென்னிமலை கூட்டுறவு நகர வங்கியின் பெருந்துறை கிளையில் 21.12.2024 அன்றும் லோன் மேளாக்கள் நடைபெறவுள்ளது.
எனவே இம்மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மக்கள் அனைவரும் மேற்படி, சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேற்படி, கடன் தொகை பெற விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயது உடையவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். கடன் மனுக்களுடன் சாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டைநகல், திட்டதொழில் அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கிகோரும் இதர ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை சமர்பிக்கவேண்டும்.
மேலும், கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்தை அணுகலாம். (தொலைபேசிஎண்.0424 - 2260155).
எனவே இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு கடன் உதவி பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால்சுன்கரா தெரிவித்துள்ளார்.