கை மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், பார்வைத்திறன் குறைபாடுடையோர் மற்றும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு Tele Medicine பயிற்சி வழங்க தேர்வு முகாம் நடைபெறல்.
கை மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் (LD), பார்வைத்திறன் குறைபாடுடையோர் (LV) மற்றும் பார்வையற்ற (VI) மாற்றுத் திறனாளிகளுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் Tele Medicine பயிற்சி வழங்குவதற்கு ஏதுவாக மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்திடும் பொருட்டு மாவட்டஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 25.11.2024 அன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேர்வு முகாம் நடைபெற உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 18 வயது முதல் 35 வயதுடையவர்களாகவும், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்களாகவும் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறும், பயிற்சி காலம் 3 மாதம், தங்கும் வசதி உணவு இலவசமாக வழங்கப்படும் மற்றும் உதவித்தொகை ரூ.6000/- வழங்கப்படும்.
தகுதியான அனைவரும் பங்கேற்று பயனடையுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.