பணியிடங்கள் விவரம்:
ஜூனியர் கணக்காளர், ஆய்வக உதவியாளர், மருத்துவமனை பல்துறை உதவியாளர், இசிஜி டெக்னீஷியன், நூலகர், ஓட்டுநர், யோகா பயிற்சியாளர், வார்டன், பெயிண்டர், செவிலியர், ரேடியோ கிராபி டெக்னிஷியன், உதவி பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர்கள், டேட்டா ஆப்ரேட்டர், நிர்வாக உதவியாளர், உதவி பொறியாளர், இஎன்டி டெக்னீஷியன், எலெட்ரீசியன், வரைவாளர், ஸ்ரோட் கீப்பர், பார்மிஸ்ட், பெயிண்டர், மெக்கானிக், பயோ மெடிக்கல் என்ஜினியர் என மொத்தம் 66 வகையான பிரிவுகளில் காலியாக உள்ள 4,576 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
கல்வித் தகுதி:
பணியின் தன்மைக்கேற்ப கல்வி தகுதி கோரப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கான பணியிடங்கள் உள்ளன. இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கும் பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
பணியின் தன்மைகேற்ப வயது வரம்பு மாறுபடும். 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்டோர்கள் வரை விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளுக்கு ஏற்றபடி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளூம், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு முறை:
சிபிடி எனப்படும் கணிணி வழி ஆன்லைன் தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ண்ப்ப கட்டணமாக ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.2,400 திருப்பி வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
விண்ணப்பிக்க வரும் 31 ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பங்களில் திருத்தம் இருந்தால் 12.02.2025 to 14.02.2025 வரை மேற்கொள்ளலாம். பிப்ரவரி 26 ஆம் தேதி மற்றும் 28 ஆம் தேதிகளில் தேர்வு நடைபெறும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
https://rrp.aiimsexams.ac.in/advertisement/677cd0d849c05cf7ac74271a