சென்னை அடையாறில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CLRI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐடிஐ, பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.38,000 சம்பளம் வழங்கப்படும்.
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் என்பது சென்னை அடையாறில் உள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான இந்த நிறுவனம் சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தலைமை அலுவலகம் சென்னையிலும் பிற கிளை அலுவலகங்கள் கொல்கத்தா, அலகாபாத் உள்ளிட்ட இடங்களிலும் உள்ளன.
மத்திய அரசின் இந்த நிறுவனத்தில் சென்னையில் காலியாக உள்ள 41 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
* (இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் / எலக்ட்ரானிக் மெக்கானிக்) - 02,
* (ஆய்வக உதவியாளர் (வேதியியல் ஆலை)) - 07,
* வரைவாளர் (சிவில்)) - 02,
* பிசியோதெரபி - 01,
* மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்) - 01,
* நர்சிங் / மருத்துவச்சி - 01,
* (மருந்தாளர்) - 01,
* கணினி ஆபரேட்டர் & புரோகிராமிங் உதவியாளர் (COPA) / புரோகிராமிங் & சிஸ்டம்ஸ் நிர்வாக உதவியாளர் (PASAA)) - 08
* மெக்கானிக் - மோட்டார் வாகனம்) -1 ஆகியவை உள்பட மொத்தம் 19 வகையான பிரிவுகளில் 41 டெக்னிஷியன் பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
ஐடிஐ, பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கான பணியிடங்கள் உள்ளன. ஐடிஐ பிரிவில் துறை சார்ந்த பிரிவை எடுத்து படித்து இருக்க வேண்டும். பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடும். கல்வி தகுதி பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.
வயது வரம்பு
வயது வரம்பை பொறுத்தவரை 28 வயதுக்கு மிகாதவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படுகிறது. எஸ்.சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும். அதாவது எஸ்.சி பிரிவினர் என்றால் 33 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:
தேர்வு செய்யபடும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக ரூ. 38,483/- வழங்கப்படும்.
தேர்வு முறை:
இரண்டு கட்ட தேர்வுகள் நடைபெறும். ஸ்டேஜ் 1 டெஸ்ட் (Trade Test), ஸ்டேஜ் 2-வில் போட்டித்தேர்வு நடைபெறும். இதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணம் ரூ.600 ஆகும். எஸ்.சி/எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கட்டணம் கிடையாது. ஆன்லைன் வழியாகவே கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.clri.org/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வரும் 16.2.2025 கடைசி நாள் ஆகும்.
மேலும் முழுவிவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து படிக்கவும்: