பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யுகோ வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 250 லோக்கல் ஆபிசர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய் 85 ஆயிரம் சம்பளம் கிடைக்கும்.
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒன்று யுகோ வங்கி. 1943 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. நாடு முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகள் இந்த வங்கிக்கு உள்ளன. பொதுத்துறை வங்கி என்பதால் இந்த வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம் + சலுகைகள் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் தான் தற்போது யுகோ வங்கியில் காலியாக உள்ள லோக்கல் ஆபிசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
பணியிடங்கள் விவரம்:
250 லோக்கல் ஆபிசர் பணியிடங்கள் உள்ளன. மாநில வாரியாக பார்த்தால் குஜராத்: 57(பணியிடங்கள்), மகாராஷ்டிரா: 70, அசாம்: 30 , கர்நாடகா: 35, திரிபுரா: 13, சிக்கிம்: 6, நாகாலாந்து: 5 , மேகாலயா: 4 , கேரளா: 15, தெலுங்கானா & ஆந்திரா: 10, ஜம்மு காஷ்மீர்: 5 ஆகிய மாநிலங்களில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருந்தால் போதும். உள்ளூர் மொழி தெரிந்து இருக்க வேண்டும். அதாவது கேரளாவில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பித்தால் மலையாளம் தெரிந்து இருப்பது அவசியம். வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளை பின்பற்றி வயது வரம்பில் தளர்வுக்ள் அளிக்கப்படும்.
சம்பளம் :
தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு மாதம் ரூ. 48,480 - 85,920/-வரை சம்பளம் அளிக்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை ஆன்லைன் டெஸ்ட், உள்ளூர் மொழித்தேர்வு/ நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யபடுவார்கள். தேர்வுகள் தமிழகத்திலும் நடைபெறும். கோவை, சென்னை, திருச்சி, நெல்லை ஆகிய நகரங்களில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்:
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதார்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்காலம். தேர்வுக் கட்டணமாக ரூ 850 செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் ரூ.175 செலுத்தினால் போதும். விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 16.01.2025 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள்; 05.02.2025 ஆகும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை படிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் முழுவிவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து படிக்கவும்: