காஞ்சிபுரம் மாவட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை மற்றும் தேசிய நலக்குழுமம் சார்பில், மாவட்ட நலச்சங்கம் (District Health Society) மூலம் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளதாவது,
காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக 04 ஒப்பந்த பணியிடங்களை District Early Intervention Centre (DEIC) - Speical Educator for Behaviour Therapy–01, Occupational Therpapist-01, NPPCD-Audiometrician-01 and NPPCD-Instructor for the Young Hearing Impaired (Speech Therapist) 01 பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்கள் https://kancheepuram.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்து சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களுடன் 17.01.2025 அன்று மாலை 05.45 மணிக்குள்,
நிர்வாக செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் /மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம்,
42A, இரயில்வே ரோடு,
அறிஞர் அண்ணா நினைவு புற்று நோய் வளாகம்,
காஞ்சிபுரம் மாவட்டம்– 631 501
அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது விரைவு அஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.