இந்திய விமான நிலைய ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள 83 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்: 01/2025/CHQ
பணி: Airport Authority Junior Executive - மொத்த காலியிடங்கள்: 83
பணி: Junior Executive (Fire Services)
காலியிடங்கள்: 13
தகுதி: பொறியியல் துறையில் Fire Engg, Mechanical, Automobile Engg பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: Junior Executive (Human Resources) 66
காலியிடங்கள்: 66
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் எம்பிஏ அல்லது எச்ஆர்எம், எச்ஆர்டி, பிஎம் க்ஷ ஐஆர், தொழிலாளர் நலன் போன்ற ஏதாவதொரு பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Executive (Official Language)
காலியிடங்கள்: 4
தகுதி: ஹிந்தி, ஆங்கிலம் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் ஹிந்தியில் இருந்து ஆங்கிலம், ஆங்கிலத்தில் இருந்து ஹிந்திக்கு மொழிபெயர்ப்பு செய்வதில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
வயதுவரம்பு: 18.3.2025 தேதியின்படி 27-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினிவழி எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://www.aai.aero என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.3.2025
மேலும் முழுவிவிரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும் - அறிவிப்பு PDF
Click here 👉 Recruitment 👆 Dashboard