குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பிட தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இதில் புதியதாக பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) - 01 பணியிடம் தொகுப்பூதியம் ரூ.27,804/- என்ற அடிப்படையிலும்,
சிறப்பு சிறார் காவல் அலகிற்கு - 2 சமூகப்பணியாளர் பணியிடம் ஒரு மாதத்திற்கு ரூ.18.536/- தொகுப்பூதியமாகவும், ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் மிஷன் வாத்சல்யா வழிகாட்டு நெறிமுறைகளின் கீழ்க்கண்ட தகுதிகளை கொண்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
1. பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) (Protection Officer (Non-Institutional Care) -1 பணியிடம்
- சமூகப்பணி (Social Work) / சமூகவியல் (Sociology) / குழந்தை வளர்ச்சி / மனித உரிமைகள்(Human Rights Public Administration) / பொது நிர்வாகம் /உளவியல் / மனநலம் / சட்டம் / பொது நலம் / சமுதாய வள மேலாண்மை ஆகிய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
(அல்லது)
- மேற்காணும் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்துடன், பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி / சமூக நலன் தொடர்பான பணிகளில் திட்டம் தயாரித்தல் / செயல்படுத்துதல் / கண்காணித்தல் / மேற்பார்வையிடுதல் தொடர்பாக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினியில் தேர்ச்சி.
- 42 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.
2. சமூகப்பணியாளர் (Social Worker) - 2
பணியிடங்கள் சமூகப்பணி (Social Work) / சமூகவியல் (Sociology) /
- சமூக அறிவியல் (Social Science) ஆகிய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம்.
- சமுகப்பணியில் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கணினியில் தேர்ச்சி.
இதற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் தேவையான தகுதி விவரங்கள் erode.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிகளுக்கு அதற்கான அமைந்த படிவத்தில் புகைப்படம் மற்றும் சான்றிதழ்கள் இணைத்து 28.02.2025 அன்று மாலை 5.30 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
குழந்தை நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை.
மாவட்ட ஆட்சியராக கூடுதல் கட்டிடம் - 6-வது தளம்,
ஈரோடு மாவட்டம் 638011.
Click here 👉Recruitment Notification Page
Click here 👉Recruitment Notification Pdf