தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறையின் மூலம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre)-ல் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,
தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறையின் மூலம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre)-ல் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மேற்படி இதற்கான விண்ணப்பங்கள் ஈரோடு மாவட்ட இணையதள முகவரி www.erode.nic.in-யில் உரிய படிவம் மற்றும் பணியிடம் மற்றும் தகுதிகள் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்காண் இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரியில் 25.02.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் தெரிவித்துள்ளார்.
1). வழக்கு பணியாளர் - 2
கல்வித் தகுதி : சமூக பணி சார்ந்த பட்டம் /உளவியலில் பட்டம்
அனுபவம் : குறைந்தபட்சம் 1 ஆண்டு அனுபவம். அரசு, அரசு அல்லாத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட நிர்வாக அமைப்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான, பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் ஈரோடு மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
சம்பளம் - Rs.18,000/-
2) - பாதுகாவலர் - 1
கல்வித் தகுதி: எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.
அனுபவம் : பாதுகாவலர் பணிக்கு உள்ளூரில் வசிப்பவராகவும், அரசாங்கத்தில் அல்லது பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
பெருந்துறை (ம) ஈரோடு பகுதியை சார்ந்தவராக இருத்தல் அவசியம்.
சம்பளம் - 12,000/-
3). பல் நோக்கு உதவியாளர் - 1
கல்வித் தகுதி: எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.
அனுபவம்: நன்கு சமைக்க தெரிந்தவராகவும், மையத்தை பராமரிக்க தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.
பெருந்துறை (ம) ஈரோடு வட்டாரத்தில் வசிப்பவராக இருத்தல் அவசியம்.
சம்பளம் - 10,000/-
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம்
மாவட்ட ஆட்சியரகம்,
6வது தளம்,
ஈரோடு - 638 011
தொலைபேசி எண் : 0424-2261405
விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.02.2025
Click here 👉Recruitment Notification Page
Click here 👉Recruitment Notification Pdf