பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள 1,194 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு எழுத்து தேர்வு இல்லை. அதோடு பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை சர்க்கிளிலும் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
நம் நாட்டில் இயங்கி வரும் பொதுத்துறை வங்கிகளில் எஸ்பிஐ எனும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவும் ஒன்றும். இந்த வங்கியில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் இப்போது எழுத்து தேர்வு இன்றி 1,194 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இது எந்த வகையான பணி யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
தற்போதைய அறிவிப்பின்படி எஸ்பிஐ வங்கியில் Concurrent Auditor பிரிவில் 1,194 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு எஸ்பிஐ மற்றும் அதன் இணை வங்கிகளில் கிரெடிட், ஆடிட், forex பின்னணியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம். contractual basis பணியாகும். இந்த காலக்கட்டத்தில் பணியாளர்களுக்கு 30 நாட்கள் வரை விடுப்பு என்பது வழங்கப்படும்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு பல்வேறு கேட்டகிரியில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது. MMGS III -ல் ஓய்வு பெற்றவர்கள் என்றால் மாதம் ரூ.45 ஆயிரம், SMGS -IV ல் ஓய்வு பெற்றவர் என்றால் ரூ.50,000, SMGS-V ஓய்வு என்றால் மாதம் ரூ.65,000, TEGS - VI ஓய்வு பெற்றவர் என்றால் ரூ.80,000 வரை சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்யும்போது ஒவ்வொருவரும் தங்களின் அடையாள அட்டை, வயது ப்ரூப் உள்பட அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் வழங்க வேண்டும். இதில் ஏதேனும் மிஸ்ஸாகும் பட்சத்தில் அவர்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாது.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். இண்டர்வியூ என்பது 100 மதிப்பெண்களின் அடிப்படையில் நடக்கும். எழுத்து தேர்வு கிடையாது. இதில் சிறப்பாக செயல்படுவோருக்கு பணி என்பது கிடைக்கும். ஒருவேளை இண்டர்வியூவில் ஒரே மாதிரியான மதிப்பெண் பெறும்பட்சத்தில் வயது அடிப்படையில் முன்னுரிமை என்பது வழங்கப்படும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, அகமதாபாத், அமராவதி, பெங்களூர், போபால், புவனேஷ்வர், சண்டிகர், கவுஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, மகாராஷ்டிரா, மும்பை மெட்ரோ, டெல்லி, பாட்னா, திருவனந்தபுரம் உள்ளிட்ட சர்க்கிள்களில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். சென்னை சர்க்கிளை பொறுத்தவரை 88 காலியிடங்கள் உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 15.03.2025
Click Here 👉அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண 👆 Notification - ADVERTISEMENT NO: CRPD/RS/2024-25/33
Click Here 👉 ஆன்லைனில் விண்ணப்பிக்க 👆 Login & Apply