இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளதாவது:
இயற்கை முறையில் மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம், 2013-ன் படி, மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுசீரமைக்கப்பட வேண்டும்.
இதற்கிணங்க, மாவட்ட அளவிலான குழுவில் உறுப்பினராக சேர விரும்பும் பொது தொண்டில் ஆர்வமுள்ள நான்கு (4) உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடையவர்கள் தங்களது விண்ணப்பங்களை 28.03.2025க்குள் நேரிலோ, தபால் மூலமாகவோ கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
📌 முகவரி:
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
இரண்டாம் தளம்,
காஞ்சிபுரம் – 631 501.